Stress Eating Health Tips: கவலையாக இருந்தால், மன சோர்வாக இருந்தால், மன உளைச்சல் அதிகமானால் என அனைத்து இக்கட்டான சூழலிலும் சிலருக்கு தனியாக பசியெடுக்கும். இதனால், பார்த்ததையெல்லாம் சாப்பிட தோன்றும். அதாவது, தங்களின் ஆற்றாமையையும் அழுத்தத்தையும் தணிக்கவும் உதவுவதாக அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், அது உண்மையல்ல.
நீங்கள் அழுத்தம் நிறைந்த சூழலில் இருக்கும்போது, கார்டிசோல் எனும் உடலில் சுரக்கும். இந்த ஹார்மோன் தான் பசியை தூண்டும், பிடித்த சாப்பாட்டை உடனே சாப்பிட வேண்டும் என்ற உணர்வையும் அதிகரிக்க வழிவகை செய்யும். அந்த வகையில் நீங்கள் அழுத்தம் நிறைந்த சூழலில் இருக்கும்போது தேவையற்ற உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இந்த ஐந்து வழிமுறைகளை பின்பற்றினால் உடல் நலமும் நன்றாக இருக்கும், மனநலமும் சீராக இருக்கும். இந்த ஐந்து வழிமுறைகள் பற்றி இங்கு விரிவாக காணலாம்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள்
சாப்பிட தோன்றினால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும். இதன் மூலம் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். உங்களின் பசி எடுக்கும் உணர்வு கட்டுக்குள் இருக்கும். வயிறு நிறைந்த உணர்வும் ஏற்படும். எனவே பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் ஆகியவற்றை உட்கொண்டு உடலுக்கு தேவையான வைட்டமின்கள், கனிமங்கள், நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை உண்ண வேண்டும்.
மேலும் படிக்க | பாடாய் படுத்தும் பல்வலியை குறைக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்
உடற்பயிற்சி செய்யுங்க
அழுத்தம் நிறைந்த சூழலில் இருக்கும் போது உங்களுக்கு பசி எடுத்தால் உடனே உடற்பயிற்சிகளை செய்ய முயற்சி செய்யுங்கள். இது என்டார்பின்ஸ் என்ற ஹார்மோனை சுரக்க வழிவகை செய்யும். இதன்மூலம் அழுத்தமும் குறையும், பதற்றம் அளவும் சீராகும். தொடர்ந்து நீங்கள் உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் போது மனநிலை எப்போதும் சீராகவே இருக்கும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், மன நிறைவும், வயிறு நிறைந்த உணர்வும் ஏற்படும். எனவே ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளை உட்கொள்ளாமல் உடல் நிலையை பேணலாம்.
பிளாக் டீ அருந்தலாம்
டீக்கடையில் பிளாக் டீ குடிக்கும் பழக்கம் இங்கு பலருக்கும் இருக்கும். அந்த வகையில் உங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த சூழலில் இருந்தால் நிதான நிலைக்கு திரும்புவதற்கு இந்த பிளாக் டீயை அருந்தலாம். ஏனென்றால் இதில் அமினோ ஆசிட் மூலக்கூறுகள் இருக்கின்றன. இது பசி சீராக வைத்து மனநிலையையும் முன்னேற்றம் அடைய செய்யும். இதன்மூலம் நீங்கள் தேவையற்ற உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
நீர்ச்சத்து
எப்போதும் தண்ணீர் குடித்துக் கொண்டே இருந்தால் அழுத்தமான சூழலிலும் கூட உங்களுக்கு அதிகமான பசியோ அல்லது உணவுகளை சாப்பிட வேண்டும் என்று விருப்பமோ ஏற்படாது. கார்டிசோல் ஹார்மோன் சுரக்கும் அளவும் குறைவாகவே இருக்கும். குறைந்த அளவுக்கு கூட உங்களுக்கு தண்ணீர் தாகம் எடுத்தாலும், பசியும் பதற்றமும் அதிகமாகிவிடும். எனவே நாள் முழுவதும் தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
மூச்சுப் பயிற்சி
இதை செய்வதன் மூலம் மனதையும் உடலையும் அமைதியாக வைத்து வைப்பதற்கு மூச்சுப் பயிற்சி அவசியமானது. சுயநினைவுடன் உங்களின் மெதுவாக மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால் இதயத்துடிப்பு சற்று குறையும், கார்டிசோல் சுரக்கும் அளவும் குறையும். இதன் மூலம் பசி எடுக்கும் உணவுகள் உணர்வுகளும் தனியும். இது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும்.
மேலும் படிக்க | மூளை ஆற்றல் முதல் கண்பார்வை கூர்மை வரை.... மக்காச்சோளத்தை அடிக்கடி சேர்த்துக்கோங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ