Agnipath: அக்னிபத் திட்டத்தில் ராணுவம் மற்றும் கடற்படைக்கான ஆட்சேர்ப்பு தொடங்கியது

 இந்திய ராணுவமும், கடற்படையும் அக்னிபத் திட்டத்திற்கு ஆளெடுப்பு இயக்கத்தை தொடங்கின; இந்திய விமானப்படையை பின்பற்றும் ஆட்சேர்ப்பு இயக்கம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 2, 2022, 10:30 AM IST
  • அக்னிபத் திட்டத்திற்கு ஆளெடுப்பு இயக்கம் தொடங்கியது
  • இந்திய விமானப்படையை பின்பற்றும் ஆட்சேர்ப்பு இயக்கம்
  • இந்திய ராணுவமும், கடற்படையும் அக்னிபத் திட்டத்திற்கு ஆளெடுப்பு இயக்கத்தை தொடங்கின
Agnipath: அக்னிபத் திட்டத்தில் ராணுவம் மற்றும் கடற்படைக்கான ஆட்சேர்ப்பு தொடங்கியது title=

புதுடெல்லி: இந்திய ராணுவம் மற்றும் இந்திய கடற்படையில் பணிபுரிவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அக்னிபத் திட்டத்தின்படி, அக்னிவீரர்களுக்கான பதிவு நேற்று (2022, ஜூலை 1) தொடங்கியது. ”இந்திய ராணுவத்தில் சேருங்கள். அக்னிபத் ஆள்சேர்ப்பு திட்டத்திற்கான பதிவு ஜூலை 1 முதல் தொடங்கும்" என்று ட்விட்டரில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டிருந்தது.

 

அக்னிபாத் ஆட்சேர்ப்பு
 
இந்திய ராணுவம் மற்றும் கடற்படை 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புக்கான பதிவை ஏற்கனவே தொடங்கிவிட்டன. விமானப்படையைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் கடற்படையும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செயல்முறைகளைத் தொடங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | இந்திய உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்புகள்: 210 பேருக்கு வாய்ப்பு

இந்திய விமானப்படை ஜூன் 24 அன்று இத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செயல்முறையைத் தொடங்கியது, வியாழன் வரை 2.72 லட்சம் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது என்று அமைச்சகம் மேலும் கூறியது.

ஜூன் 14 அன்று வெளியிடப்பட்ட இந்த திட்டத்திற்கு எதிரான எதிர்ப்புகள் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பல மாநிலங்களை உலுக்கியது நினைவிருக்கலாம். மேலும், அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெறவேண்டுமெ ந்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரும் நிலையில் தற்போது ஆட்சேர்ப்பு நடைமுறை தொடங்கியிருக்கிறது.

“இந்திய கடற்படையில் அக்னிவீரர்களுக்கான பதிவு இன்று தொடங்குகிறது. இந்திய ராணுவத்தில் சேருங்கள். அக்னிவீரராக நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற உங்கள் கனவை நிறைவேற்றுங்கள். அக்னிபத் ஆட்சேர்ப்பு திட்டத்திற்கான பதிவு ஜூலை 1 முதல் திறக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.  

மேலும் படிக்க | ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கான வேலைவாய்ப்பு

அக்னிபாத் திட்டம் என்றால் என்ன?
அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் நான்கு ஆண்டு காலத்திற்கு ஆயுதப் படைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்,  அவர்களில் 25 சதவீதம் பேர் தொடர்ந்து வழக்கமான சேவைகளில் சேரும் வாய்ப்புகளைப் பெறுவார்கள்.  

ஜூன் 16 அன்று, இந்தத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகபட்ச வயது வரம்பை இந்த ஆண்டிற்கான 21 வயதிலிருந்து 23 ஆக உயர்த்திய அரசாங்கம், பின்னர் மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் பாதுகாப்பு பொதுத் துறை நிறுவனங்களில் அக்னிவீரர்களுக்கு முன்னுரிமை என, இந்தத் திட்டத்தில் பல தளர்வுகளை அறிவித்தது. 

மேலும் படிக்க | Indian Army Recruitment: இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு 

புதிய ஆள்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிராக வன்முறைப் போராட்டங்கள் மற்றும் தீவைப்புகளில் ஈடுபட்டவர்கள், இந்த பணிக்கு எடுக்கப்பட மாட்டார்கள் என ஆயுதப் படைகள் தெளிவுபடுத்தியுள்ளன.
 
பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களும், அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் அக்னிவீரர்களுக்கு, மாநில காவல்துறையில் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளன.

மேலும் படிக்க: 'அக்னிபாத்' திட்டத்தால் பற்றி எரியும் வட மாநிலங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQ

Trending News