சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI) உடன் இணைந்த பிறகு ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சோனிக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு விற்ற பத்து ஸ்போர்ட்ஸ் சேனல்களும் ஜீ நிறுவனத்திற்குத் திரும்பும் என்று ஜீ-யின் MD மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி புனித் கோயங்கா கூறியுள்ளார்.
டிஜிட்டல் உலகம் விளையாட்டுகளை பணமாக்குவதற்கான ஒரு சுற்றுச்சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, ஜீ - சோனி நிறுவனம் விளையாட்டு சேனல்களை மீண்டும் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இதன்மூலம் குழந்தைகள் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிரியர்களை எங்கள் பக்கம் இழுக்க முடியும் என்று கூறினார். ஜீ - சோனி இணைப்புக்குப் பிறகு, சோனியின் 10 விளையாட்டு சேனல்களுக்கு ஜீக்கு கிடைத்துள்ளது. இதில் சமீபத்தில் தொடங்கப்பட்ட பிராந்திய சேனலான டென் 4 ம் அடங்கும். மேலும்,மற்ற விளையாட்டு சேனல்களான சோனி சிக்ஸ், சோனி டென் 1, சோனி டென் 2, சோனி 3 இவை அனைத்து சேனல்களின் எச்டி பதிப்புகளும் அடங்கும். ஏற்கனவே சோனி இடம் WWE, FIFA, EURO football Championship, அடுத்த வருடம் இந்தியாவில் நடக்க உள்ள ஆஸ்திரேலியா, இங்கிலாந்து சுற்றுப்பயணம் போன்றவற்றுக்கான ஒளிபரப்பு உரிமை உள்ளது.
ஜீ - சோனி நிறுவனத்திற்கு விளையாட்டு ஒளிபரப்பு ஒரு முக்கிய வருமான அம்சமாக இருக்கும் போது, இவற்றிற்கு டிஸ்னி & ஸ்டாரிடம் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தற்போது உள்ள கள நிலவரத்தின் படி டிஸ்னி & ஸ்டார் மற்றும் சோனி நிறுவனத்திற்கு இடையே தான் போட்டி இருந்து வருகிறது. 2019 இல் விளையாட்டு ஒளிபரப்பிலிருந்து சோனி சுமார் 700-800 கோடி விளம்பர வருவாய் ஈட்டியதாக மதிப்பிடப்பட்டிருந்தாலும், அந்த ஆண்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 12 மூலம் மட்டும் ரூ. 2,100 கோடி விளம்பர வருவாய் ஈட்டியது. இதனால்தான் இரண்டு நெட்வொர்க்குகளுக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதாக எலரா கேபிடல் மூத்த துணைத் தலைவர் ஆய்வாளர் கரண் டவுரானி கூறியுள்ளார். மேலும், இரண்டு நெட்வொர்க்குகளின் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் மூலம் வரும் விளம்பர வருவாயை சுட்டிக்காட்டினார்.
SONY LIV மூலம் ரூ. 150-160 கோடி வருமானம் கிடைக்கிறது என்றால் அதில் 70 சதவிகிதம் விளையாட்டின் மூலமாகவே வருகிறது. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் மட்டும் 800 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. ஐபிஎல் இன் மூலம் மட்டும் 500 முதல் 600 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும், பிற விளையாட்டு மூலம் சுமார் 200-300 கோடி வருமானம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஸ்போர்ட்ஸ் இல் வரும் வருமானத்தில் 80% கிரிக்கெட்டால் மட்டுமே வருகிறது.
சோனி நெட்வொர்க்கிற்கு ஐபிஎல் உரிமைகள் இருந்தபோது சோனி கூட வலுவான விளம்பர வருமானத்தை ஈர்த்தது. 2017 ல், ஐபிஎல் லீக்கின் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் வாங்குவதற்கு முந்தைய வருடம், ஐபிஎல் 10 வது சீசனின் போது சோனி சுமார் 1,300 கோடி விளம்பர வருவாயைப் பதிவு செய்தது.
மீண்டும் விளையாட்டுத்துறையில் கால் பதிக்க ஜீ - சோனி நிறுவனம் 1.57 பில்லியன் டாலர்களைக் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த வருடம் கொரோனா அலையின் பாதிப்பால் முடங்கிய விளையாட்டுத்துறை தற்போது மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. இந்தியர்கள் விளையாட்டின் மீது கொண்டுள்ள அதீத காதலால் நிறுவனங்களுக்கு விளம்பர வருவாயும் அதிகமாகி உள்ளது. உலகளவில் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டாக ஐபிஎல் உள்ளது. எனவே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஸ்போர்ட்ஸ் சேனல்களில் வருவாய் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR