நீயா நானா? TikTok மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடுகளுக்கு ByteDance சவால்

தனது வீடியோ பகிர்வு தளமான TikTokஇன் சேவைகளை பெறுவதற்காக அதை அமெரிக்காவில் பதிவிறக்குவதற்கு அந்நாட்டு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக சீன நிறுவனம் ByteDance சவால் விடுத்துள்ளது...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 24, 2020, 08:52 PM IST
  • புதிய டிக்டாக் பதிவிறக்கங்களை தடை செய்வதை செப்டம்பர் 27 வரை ஒத்திவைப்பதாக அமெரிக்க வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது...
  • டிக்டாக்கின் மீது முழுமையான கட்டுப்பாட்டை ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்...
நீயா நானா? TikTok மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடுகளுக்கு ByteDance சவால் title=

தனது வீடியோ பகிர்வு தளமான TikTokஇன் சேவைகளை பெறுவதற்காக அதை அமெரிக்காவில் பதிவிறக்குவதற்கு அந்நாட்டு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக சீன நிறுவனம் ByteDance சவால் விடுத்துள்ளது. "2020 ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட நிறைவேற்று ஆணையை (executive order) அமல்படுத்தவோ அல்லது அமல்படுத்துமாறு கட்டளையிட்ட பூர்வாங்க தடையில் இருந்து நிவாரணம் பெற வாதிகளுக்கு (plaintiffs) உரிமை உண்டு" என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க வர்த்தகத் துறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணத்தில் TikTok மற்றும் ByteDance குறிப்பிட்டிருப்பதை மேற்கோள் காட்டி ஸ்பூட்னிக் (Sputnik) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 20 முதல் ஆண்ட்ராய்டின் கூகிள் ப்ளே (Google Play) மற்றும் ஆப்பிள் பிளேஸ்டோரிலிருந்து டிக்டோக் மற்றும் WeChat பதிவிறக்கம் செய்ய தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க வணிகச் செயலாளர் வில்பர் ரோஸ் (Wilbur Ross) அறிவித்திருந்தார். அதோடு, Tencent, ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என்று ஸ்பூட்னிக் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வர்த்தகத் துறைக்கு எதிரான வழக்கை பைட் டான்ஸ் கைவிட்ட பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 

"Please take notice that plaintiffs TikTik Inc and ByteDance Ltd ..." என்று தொடங்கும் அந்த ஆவணம், ”டொனால்ட் ஜே டிரம்ப், வில்ஃபர் எல்.ரோஸ் துறை மற்றும் அமெரிக்க வர்த்தகத்துறை என பிரதிவாதிகள் அவர்கள் எடுத்த நடவடிக்கைகளை பாரபட்சம் இல்லாமல் தள்ளுபடி செய்கிறோம்" என்று கூறுகிறது. வாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின் நகலை கணினியில் பார்த்ததாக ஸ்பூட்னிக் கூறுகிறது. 

புதிய டிக்டாக் பதிவிறக்கங்களை தடை செய்வதை  செப்டம்பர் 27 வரை ஒத்திவைப்பதாக அமெரிக்க வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.  இதற்கிடையில், சீனாவின் வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக்கின் மீது முழுமையான கட்டுப்பாட்டை ஆரக்கிள் (Oracle) மற்றும் வால்மார்ட் (Walmart) எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். அப்போது தான், பைட்டான்ஸ் மற்றும் அதன் இரண்டு அமெரிக்க பங்காளிகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தை அமெரிக்கா அங்கீகரிக்கும் என்று டிரம்ப் அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவே தோன்றுகிறது. 

Read Also | அமெரிக்காவில் செயல்பட US IPO நம்பி காத்திருக்கும் TikTokகின் Byte Dance

Trending News