புதுடெல்லி: நெற்கதிரை அறுவடை செய்தபின் நிலத்தில் தங்கியிருக்கும் மிச்சங்களை எரிப்பது வழக்கம். அதேபோல, வடமாநிலங்களில் நெற்கதிர்களோடு, கோதுமைக் கதிர்களையும் எரிப்பார்கள். இதற்கு Stubble burning என்று பெயர். பயிர்க்கழிவுகளை எரிப்பதால், சுற்றுசூழல் மாசுபாட்டிற்கு பலியாகும் டெல்லி மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு இந்த ஆண்டு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்ற செய்தி மகிழ்ச்சியாக இருக்கும். ஏனென்றால் பயிர்க்கழிவுகளை எரிப்பதற்குப் பதிலாக சம்பாதிப்பதற்கான வழிமுறையாக மாற்றிக் கொண்டு, விவசாயிகள் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டிற்கு காரணமாக இருந்த பயிர்க்கழிவு தற்போது லாபகரமான வியாபாரமாக மாறியுள்ளது. பஞ்சாப் மாநில விவசாயிகள் பலர், அறுவடைக்கு பின் எஞ்சும் பயிர்க்கழிவுகளை வயல்களில் எரிக்காமல், பயோமாஸ் (Biomass Plants) மற்றும் கொதிகலன்கள் (Boilers) என பயிர்க்கழிவுகளை எரிபொருளாக மாற்றும் தொழில்களுக்கு விற்று, பல லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகின்றனர்.
பஞ்சாப் விவசாயிகள், வயல்களில் குப்பைக்கூளங்களை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடானது நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவிற்கு பரவி, அது காற்று மாசுக்கு காரணமாகிறது.
மேலும் படிக்க | தமிழகத்திற்கு MGNREGA நிலுவைத்தொகையை உடனடியாக விடுவிக்க முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
குர்தாஸ்பூரில் வசிக்கும் பல்விந்தர் சிங், கடந்த ஆண்டு 'பேலர்' வாங்கி, பின்னர் வைக்கோல் மூட்டைகளை தயாரித்து வணிகர்களுக்கு விற்கத் தொடங்கினார். இவர் மட்டுமல்ல, இவரைப் போல பல விவசாயிகள், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பேலர் இயந்திரத்தை வாங்கி பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இந்த இயந்திரம், டிராக்டருடன் இணைக்கப்பட்டு வயல்களில் உள்ள பயிர்க்கழிவுகளை சேகரித்து வைக்கோல் மூட்டைகளாக ஆக்குகிறது.
இதனால், கடந்த ஆண்டு 1,400 டன் வைக்கோல் விற்பனை செய்த பல்விந்தர் இந்த ஆண்டு 3,000 டன் வைக்கோல் விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தார். அவர் அருகிலுள்ள கிராமங்களில் இருந்து குப்பைகளை சேகரித்து, பின்னர் பதான்கோட்டில் உள்ள ஒரு மின் உற்பத்தி நிறுவனத்திற்கு வழங்குகிறார்.
கடந்த ஆண்டு இந்த முன்முயற்சியைத் தொடங்கிய அவரும் அவரது கூட்டாளிகளும் தாங்கள் முதலீடு செய்த தொகையை ஒரு வருடத்திற்குள் திரும்ப எடுத்துவிட்டார்கள். இந்த ஆண்டு அவர்களின் விற்றுமுதல் 15 லட்சம் ரூபாய் என்ற அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். ஒரு குவிண்டால் வைக்கோல் ரூ.180 என்ற விலையில் விற்கப்படுகிறது.
மேலும் படிக்க | மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு! போனில் பேசி தீர்வு காணும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மலேர்கோட்லாவைச் சேர்ந்த குர்பிரீத் சிங் என்ற விவசாயி, நெல் அறுவடைக்கு பிறகு எஞ்சிய வைக்கோலை பேலர் மூலம் பேலாக மாற்றி விற்பனை செய்துவருகிறார். கடந்த ஆண்டு ரூ.20 லட்சம் மதிப்புள்ள வைக்கோல் விற்ற அவர், அனைத்து செலவுகளையும் கழித்த பிறகு, 7-8 லட்சம் ரூபாய் வரை சேமித்ததாகக் கூறுகிறார். கடந்த ஆண்டு 1,200 டன் வைக்கோல் விற்பனை செய்த அவர், இந்த ஆண்டு 5,000 டன் அளவுக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளார்.
அடுத்த ஆண்டு, ஜனவரி முதல் மார்ச் வரை விற்பனை செய்ய வைக்கோலை சேமித்து வைக்க திட்டமிட்டுள்ளதாக மலேர்கோட்லாவின் ஃபிரோஸ்பூர் குத்லா கிராமத்தில் 10 ஏக்கர் விவசாய நிலத்தை வைத்திருக்கும் குர்பிரீத் கூறினார். ஆண்டின் தொடக்க மாதங்களில் அதன் விலை குவிண்டால் ஒன்றுக்கு 280-300 ரூபாய் வரை உயரும். தற்போது ஒரு குவிண்டால் ரூ.170 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பயோமாஸ் ஆலைகள், காகித ஆலைகள் மற்றும் கொதிகலன்களின் தேவை அதிகரித்து வருவதால், மாநிலத்தில் பல விவசாயிகள் 'பேலர்'களை வாங்குகின்றனர். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதால், சமீபத்திய ஆண்டுகளில் தேசிய தலைநகரில் காற்று மாசுபாடு கணிசமாக அதிகரித்துள்ளது.
பஞ்சாப் அரசு பேலர் வாங்குவதற்கு மானியம் வழங்குகிறது
பஞ்சாப் அரசு, பயிர்க்கழிவுகளை நிர்வகிப்பதற்காக பேலர்களை வாங்குவதற்கு மானியம் வழங்குகிறது. செங்கல் சூளைகளின் மொத்த எரிபொருள் தேவையில் 20% வைக்கோல் துகள்களை பயன்படுத்துவதை மாநில அரசு ஏற்கனவே கட்டாயமாக்கியுள்ளது.
பஞ்சாப், சுமார் 31 லட்சம் ஹெக்டேர் நெல் நிலப்பரப்பில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 180-200 லட்சம் டன் வைக்கோலை உற்பத்தி செய்கிறது, இதில் 120 லட்சம் டன்கள் இடத்திலேயே (வயல்களில் பயிர் எச்சங்களை கலப்பது) மற்றும் சுமார் 30 லட்சம் டன்கள் எக்ஸ்-சிட்டு மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நெல் அறுவடை செய்த பிறகு, ராபி பயிராக கோதுமை சாகுபடி செய்வதற்கு மிகக் குறைந்த நேரமே உள்ளது, எனவே விவசாயிகள் அடுத்த பயிரை விதைப்பதற்கு ஏதுவாக பயிர் எச்சங்களை விரைவாக அகற்றுவதற்காக தங்கள் வயல்களுக்கு தீ வைப்பதை பல ஆண்டுகளாக வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
இந்த பயிர்க்கழிவு எரிக்கும் விஷயத்தினால் டெல்லிக்கு எப்போதுமே பிரச்னைதான். பயிர்க்கழிவுகளை எரிப்பதை நிறுத்தச் சொல்லி உச்ச நீதிமன்றமும், பசுமை தீர்ப்பாயமும் பலமுறை எச்சரிக்கை விட்டிருக்கின்றன. நாசாவின் படங்கள் தரும் தகவலின்படி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில கிராமங்களில் எரிக்கப்படும் பயிர்க்கழிவுகளே இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மட்டும் 7 முதல் 8 மில்லியன் டன் நெல் அறுவடை செய்யப்படுகிறது. அந்த எச்சங்களை இந்த மாதத்தில்தான் எரிக்கிறார்கள், இது புகைமூட்டத்தை உருவாக்கி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மேலும் படிக்க | தீபாவளிக்கு விவசாயிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் ஜாக்பாட் பரிசு கொடுக்கும் அரசு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ