பங்கு சந்தையை ஒப்பிடுகையில் பாதுகாப்பான முதலீடாகவும், வருமானத்தை அள்ளித் தருவதாகவும் இருப்பதால், மியூச்சுவல் ஃபண்ட் இன்று மிகவும் பிரபலமாக உள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ஏஎம்எஃப்ஐ) வெளியிட்ட தரவுகளிலிருந்து மியூச்சுவல் ஃபண்ட் துறையின் மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்பது தெளிவாகிறது. நடுத்தர சாமான்ய மக்களும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) ஒரு சிறந்த முதலீட்டு முறையாகும்.
கோடீஸ்வரராகும் கனவை சாமானியர்களும் எளிதாக நிறைவேற்றலாம்
மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபியில் முதலீடு (Investment Tips) செய்வதால் இரண்டு நன்மைகள் உள்ளன. இதன் மூலம், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் இருந்து பெறுவதைப் போல கவர்ச்சிகரமான வருவாயைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், கூட்டு வட்டி வருமானத்தின் பலனையும் பெறுகின்றனர். இன்றைய காலகட்டத்தில், மியூச்சுவல் ஃபண்டுகளின் SIP மூலம் கோடீஸ்வரராகும் கனவை சாமானியர்களும் எளிதாக நிறைவேற்றலாம். முதலீடுகளில் கிடைக்கும் ரிட்டர்ன்களின் வரலாற்றைப் பார்த்தால், மாதம் ரூ.1,000 சேமிப்பதன் மூலம் ரூ.1 கோடிக்கும் அதிகமான நிதியை எளிதாக சேகரிக்க முடியும்.
ரூ.1000 முதலீட்டை ரூ. 1 கோடி நிதியாக உருவாக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்?
நீண்ட கால அடிப்படையில், பரஸ்பர நிதிகள் முதலீட்டாளர்களுக்கு 12 முதல் 15 சதவீதம் வரை வருமானத்தை அளித்துள்ளன. சில சமயங்களில் 15% முதல் 25% வரையிலான வருமானத்தையுல் கொடுக்கின்றன. இப்போது, ஒரு முதலீட்டாளர் கோடீஸ்வரர் ஆக விரும்பினால், மாதாந்திர SIP ரூ. 1000 முதலீடு எத்தனை ஆண்டுகளில் அவரை கோடீஸ்வரராக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்
கோடீஸ்வரர் ஆக, நீங்கள் 39 ஆண்டுகளுக்கு ரூ.1,000 எஸ்ஐபி செய்ய வேண்டும். 39 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களிடம் ரூ. 1 கோடிக்கு மேல் கார்ப்ஸ் இருக்கும். இந்த மதிப்பீட்டில் ஆண்டு SIP வருமானம் 12 சதவீதம். இந்த காலகட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.4.68 லட்சம் மட்டுமே. ஆனால் வருமானமோ சுமார் 95 லட்சம்.
SIP என்றால் என்ன?
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான எளிதான வழி எஸ்ஐபி . SIP என்பது ஒரு வங்கி RD போன்றது, ஆனால் இங்கே நீங்கள் வங்கியை விட சிறந்த வருமானத்தைப் பெறுவீர்கள். SIP மூலம் ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்டுகளில் உங்களால் முடிந்த அளவு முதலீடு செய்யலாம். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை கழிக்கப்பட்டு SIP கணக்கில் முதலீடு செய்யப்படும். உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது முதலீட்டுத் தொகையை வருடா வருடம் அதிகரித்தால், குறைந்த ஆண்டுகளிலேயே கோடீஸ்வரர் ஆகலாம்.
பணத்தை பன்மடங்காக்க உதவும் டாப்-அப் முதலீடு
உங்கள் வழக்கமான SIP முதலீட்டு தொகையுடன் உங்களால் முடிந்த தொகையை முதலீட்டில் சேர்ப்பதன் மூலம் பணத்தை பன்மடங்காக்கலாம். உங்கள் வேலையின் தொடக்கத்தில், நீங்கள் ரூ.2,000 மாதாந்திர SIP என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம். உங்கள் சம்பளம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும். அந்த விகிதத்தில் ஒவ்வொரு வருடமும் உங்களால் முடிந்த தொகையை எஸ்ஐபியில் கூடுதலாக முதலீடு செய்வது நல்ல வருமானத்தை கொடுக்கும்.
முக்கிய குறிப்பு: பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. SIP என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டமாக இருப்பதால், அதன் வருமானமும் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. எந்த விதமான முதலீடும் செய்வதற்கு முன், கண்டிப்பாக உங்கள் சந்தை நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ