PPF: இந்திய பங்குச் சந்தையில் தொடரும் இந்த சரிவால், பங்கு முதலீட்டாளர்கள் மட்டுமின்றி, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் முதலீடுகளிலும், வருமானம் சிறிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. சந்தையில் தொடர்ந்து வரும் சரிவின் தாக்கம் சிறு முதலீட்டாளர்கள் மீது அதிகம் இருக்கும். இவை தவிர, புதிதாக சந்தைக்கு வருபவர்களும் இந்த வீழ்ச்சியால் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
பாதுகாப்பான முதலீடு
பங்குச் சந்தையின் பெரும் அபாயங்களிலிருந்து விலகி பாதுகாப்பான முதலீட்டை விரும்புபவர்களுக்கு PPF சிறந்த தேர்வாக இருக்கும். அதோடு, நிலையான வருமானத்தைக் கொடுக்கும் சிறந்த திட்டம் என்பதை மறுக்க இயலாது.
பொது வருங்கால வைப்பு நிதி என்னும் PPF
PPF அதாவது பொது வருங்கால வைப்பு நிதி என்பது மத்திய அரசால் நடத்தப்படும் அரசாங்க முதலீட்டுத் திட்டமாகும். அரசாங்க திட்டம் என்பதால், உங்கள் முதலீடு இதில் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். தற்போது, PPFக்கு 7.1 சதவீதம் ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. PPF கணக்கை நாட்டில் உள்ள எந்த வங்கியிலும் தொடங்கலாம். இது தவிர, தபால் நிலையத்திலும் பிபிஎஃப் தொடங்கலாம்.
PPF திட்டத்தின் குறைந்த பட்ச மற்றும் அதிகபட்ச முதலீடு
PPF திட்டத்தின் கீழ் ஒரு வருடத்தில் குறைந்தது 500 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சத்தை பிபிஎஃப்-ல் டெபாசிட் செய்யலாம். இந்தத் திட்டத்தில் உங்கள் வசதிப்படி, மொத்த தொகையிலும் தவணை முறையிலும் முதலீடு செய்யலாம்.
ஆண்டு தோறும் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு எவ்வளவு பணம் கிடைக்கும்?
PPF திட்டம் 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. இந்தத் திட்டத்தில் ஆண்டு தோறும் ரூ. 1 லட்சத்தை டெபாசிட் செய்தால், முதிர்ச்சியின் போது உத்திரவாதத்துடன் மொத்தம் ரூ.27,12,139 கிடைக்கும். உங்கள் முதலீடு ரூ.15 லட்சம் தவிர, இதில் ரூ.12,12,139 நிலையான வட்டியும் அடங்கும். இந்த அரசாங்கத் திட்டத்தில் நாட்டின் எந்தவொரு குடிமகனும் கணக்கைத் தொடங்கலாம். நீங்கள் விரும்பினால், உங்கள் மைனர் குழந்தையின் பெயரிலும் PPF இல் முதலீடு செய்யலாம். ஒருவரின் பெயரில் ஒரு பிபிஎஃப் கணக்கு மட்டுமே திறக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் குட் நியூஸ்: மார்சில் 56% அகவிலைப்படி, டிஏ அரியர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ