PM KISAN 17-வது தவணை நாளை வருகிறது: பயனாணிகள் பட்டியலில் உங்கள் பெயரை செக் செய்வது எப்படி?

PM KISAN 17th Installment update: வாரணாசியில் நாளை (18 ஜூன் 2024) நடைபெறும் நிகழ்வின் போது 9.26 கோடி பயனாளி விவசாயிகளுக்கு பிரதமர் ரூ.20,000 கோடியை வழங்குவார் என இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 17, 2024, 05:54 PM IST
  • பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் கிசான் நிதியின் 17வது தவணையை வெளியிடுவதற்கான தனது முதல் கோப்பில் கையெழுத்திட்டார்.
  • இதன் மூலம் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.
  • மேலும் சுமார் 20,000 கோடி ரூபாய் ஜூன் 10 ஆம் தேதி விநியோகிக்கப்படும்.
PM KISAN 17-வது தவணை நாளை வருகிறது: பயனாணிகள் பட்டியலில் உங்கள் பெயரை செக் செய்வது எப்படி? title=

PM KISAN 17th Installment update: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டத்தின் 17வது தவணை பற்றிய புதுப்பிப்பு வந்துள்ளது. பிஎம் கிசான் யோஜனா திட்டத்தின் 17வது தவணை பணத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். இதன் கீழ் தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை ரூ.2,000 வரவு வைக்கப்படும்.

வாரணாசியில் நாளை (18 ஜூன் 2024) நடைபெறும் நிகழ்வின் போது 9.26 கோடி பயனாளி விவசாயிகளுக்கு பிரதமர் ரூ.20,000 கோடியை வழங்குவார் என இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் கிசான் நிதியின் 17வது தவணையை வெளியிடுவதற்கான தனது முதல் கோப்பில் கையெழுத்திட்டார். இதன் மூலம் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். மேலும் சுமார் 20,000 கோடி ரூபாய் ஜூன் 10 ஆம் தேதி விநியோகிக்கப்படும்.

"விவசாயிகள் நல்வாழ்வுக்கு எங்களுடைய அரசு முழுமையான அர்ப்பணிப்பை அளிக்கின்றது. ஆகையால், பிரதமர் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திடப்பட்ட முதல் கோப்பு விவசாயிகளின் நலன் தொடர்பானது என்பது பொருத்தமாக உள்ளது. விவசாயிகளுக்காகவும், விவசாயத் துறைக்காகவும் இன்னும் அதிகமாக உழைக்க விரும்புகிறோம்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

மேலும் படிக்க | FD முதலீடுகளுக்கு அதிக வட்டி வழங்கும் HDFC வங்கி... சான்ஸை மிஸ் பண்ணாதீங்க...!!

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி 17வது தவணை: பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை எப்படி பார்ப்பது? 

- முதலில் https://pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ PM KISAN இணையதளத்திற்கு செல்லவும். 

- Payment Success டேப்பின் கீழ் இந்தியாவின் வரைபடத்தைக் காண்பீர்கள்.

- வலது புறத்தில், "Dashboard" என்ற மஞ்சள் நிற டேப் இருக்கும்.

- டாஷ்போர்டில் கிளிக் செய்யவும்.

- கிளிக் செய்த பிறகு, நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்

- கிராம டாஷ்போர்டு டேபில், உங்கள் முழு விவரங்களையும் நிரப்ப வேண்டும்

- மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம் மற்றும் பஞ்சாயத்தை தேர்ந்தெடுக்கவும்

- பிறகு ஷோ பட்டனை கிளிக் செய்யவும்

- இதற்குப் பிறகு உங்கள் விவரங்களைத் தேர்ந்தெடுக்கலாம்

- Get Report' பொத்தானைக் கிளிக் செய்யவும்.

- இப்போது பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை செக் செய்யலாம். 

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (Pradhan Mantri Kisan Samman Nidhi) திட்டம், 2019 இல் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இது நாடு முழுவதும் உள்ள அனைத்து நில உரிமையாளர் விவசாயி குடும்பங்களுக்கும் விவசாய நிலத்துடன் வருமான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சில விலக்குகளுக்கு உட்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6000 தொகையானது, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக தலா ரூ.2000 வீதம் மூன்று மாதத் தவணைகளில் அளிக்கப்படுகின்றது. 

மேலும் படிக்க | ரயில் விபத்துக்கான காப்பீடு... 45 பைசாவிற்கு ரயில் பயணக் காப்பீடு... முழு விபரம்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News