மகா சிவராத்திரி 2025... தடைகளை எல்லாம் தகர்த்து எறியும் 5 ராசிகள்

சிவபெருமானுக்கு மிகவும் பிரியமான குறிப்பிட்ட 5 ராசிக்காரர்கள், தங்கள் வாழ்க்கையில் ஏதேனும் சவால்கள் அல்லது பிரச்சனைகள் வந்தால், அவர்கள் சிவபெருமானின் அருளுடன் எளிதாக சமாளிப்பார்கள். சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள் எவை என்று தெரிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 24, 2025, 09:07 AM IST
  • சில ராசிகள், சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெறும் பாக்கியசாலிகளாக இருக்கிறார்கள்.
  • சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள் எவை?
  • மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாத சிவராத்திரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
மகா சிவராத்திரி 2025... தடைகளை எல்லாம் தகர்த்து எறியும் 5 ராசிகள் title=

Maha Shivaratri 2025: சிவ பெருமானுக்கு உகந்த மகா சிவராத்திரி வரும் பிப்ரவரி மாதம் 26ம் தேதி, புதன்கிழமை அதாவது, மாசி மாத கிருஷ்ணபக்ஷ, சதுரதசி திதி அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த சில ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட சில ராசிகள், சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெறும் பாக்கியசாலிகளாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பேரதிஷ்டம் கொண்ட ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்வோம். 

மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாத சிவராத்திரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தென்னாடுடைய சிவனை மகிழ்விக்க, சிவ பக்தர்கள் விரதமிருந்து, வழிபட்டு, அவன் அருளைப் பெற அபிஷேகம் செய்கின்றனர். இந்நிலையில், ஜோதிட சாஸ்திரத்தில், சில ராசிகளுக்கு சிவபெருமானின் சிறப்புகள் உள்ளன என்றும் இவர்கள் சிவனுக்கு மிகவும் பிரியமானவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

சிவபெருமானுக்கு மிகவும் பிரியமான குறிப்பிட்ட 5 ராசிக்காரர்கள், தங்கள் வாழ்க்கையில் ஏதேனும் சவால்கள் அல்லது பிரச்சனைகள் வந்தால், அவர்கள் சிவபெருமானின் அருளுடன் எளிதாக சமாளிப்பார்கள். சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள் எவை என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்: மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் மற்றும் அனுமனின் சிறப்பு அருள் பெற்ற ராசி. ஹனுமானும் சிவபெருமானின் ஒரு அவதாரமாக கருதப்படுவதால் சிவபெருமானுக்கு பிடித்த ராசிகளில் முதல் ராசி மேஷமாக உள்ளது. தென்னாடுடைய சிவனின் அருளால் தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறி, வேலையில், தொழிலில், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள்.

கடகம்: கடகத்தின் அதிபதி சந்திரன். சிவபெருமான் தனது தலையில் அணிந்துள்ளார். எனவே கடக ராசிக்காரர்களும் சிவபெருமானுக்கு மிகவும் விருப்பமானவர்கள். இந்த ராசிகள் மகிழ்ச்சியான, சகிப்புத்தன்மை மற்றும் பொறுமையானவர்கள். எந்தச் சிரமத்தையும் எளிதாகச் சமாளிக்கும் திறன் பெற்றவர்கள்.

மேலும் படிக்க | மகா சிவராத்திரி 2025... இன்னல்கள் அனைத்தும் விலக ராசிக்கு ஏற்ற எளிய பரிகாரங்கள்

துலாம்: துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். சிவபெருமானுக்கு பிடித்தமான ராசிகளில் துலாம் ராசியும் அடங்கும். சிவபெருமானின் அருளால் இந்த ராசிக்காரர்கள் அற்புதமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்வில் செல்வத்திற்கு பஞ்சம் இருக்காது. கவர்ச்சிகரமான ஆளுமையும் கொண்டவர்கள்.

மகரம்: மகர ராசிக்கு அதிபதி சனி பகவான். சிவனை வணங்குபவருக்கு சனியால் கூட எந்தத் தீங்கும் செய்ய முடியாது. இந்த ராசிக்காரர்களை கஷ்ட காலங்களில் சிவபெருமான் காக்கிறார். ஏழரை நாட்டு சனி பாதிப்பு, சனி திசை, சனி தோஷம் போன்ற பாதிப்புகள் எதுவும் இருக்காது

கும்பம்: கும்பத்தின் அதிபதியும் சனி தேவன் தான், இவர்களும் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமானவர்கள். கும்ப ராசிக்காரர்கள் உண்மையும், நேர்மையும் கொண்டவர்கள். மற்றவர்களுக்கு நன்மையும் செய்பவர்கள். எனவே, சிவபெருமான் இவர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறார்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | மகா சிவராத்திரி அன்று உங்கள் ராசிப்படி தானம் செய்யுங்கள்: சிவனருளால் செல்வம் பெருகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News