PPF: மாதம் ரூ.1000 முதலீடு செய்தால் போதும், ரூ.8 லட்சம் வருமானம், வரி விலக்கு... பல நன்மைகள்

Public Provident Fund: அரசுத் திட்டங்களில் முதலீடு செய்வது பற்றி எண்ணும்போது, ​​பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்ற பெயர் கண்டிப்பாக வரும். தபால் துறையின் பிரபலமான திட்டங்களில் இதுவும் ஒன்று. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 26, 2024, 01:45 PM IST
  • அரசு உத்தரவாதம் பெற்றுள்ள PPF திட்டத்தில், குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
  • PPF திட்டம் 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது.
  • இதனுடன் வரிச் சலுகைகளும் இதில் கிடைக்கும்.
PPF: மாதம் ரூ.1000 முதலீடு செய்தால் போதும், ரூ.8 லட்சம் வருமானம், வரி விலக்கு... பல நன்மைகள் title=

Post Office Saving Scheme: பணத்திற்கான தேவை நம் அனைவருக்கும் உள்ளது. எதிர்காலத்தை பண பற்றாக்குறை இல்லாமல் கழிக்க நாம் பல வித சேமிபுத் திட்டங்களில் முதலீடு செய்கிறோம். இவற்றில் அரசு ஆதரவு பெற்ற திட்டங்களுக்கு பெரும்பாலானோர் அதிக முக்கியத்துவம் அளிப்பதுண்டு. ஏனெனில், இவற்றின் மூலம் பாதுகாப்பான வழியில் நல்ல லாபம் ஈட்டலாம். 

Public Provident Fund:

அரசுத் திட்டங்களில் முதலீடு செய்வது பற்றி எண்ணும்போது, ​​பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்ற பெயர் கண்டிப்பாக வரும். தபால் துறையின் பிரபலமான திட்டங்களில் இதுவும் ஒன்று. அரசு உத்தரவாதம் பெற்றுள்ள இந்தத் திட்டத்தில், குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். PPF திட்டம் 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. இதனுடன் வரிச் சலுகைகளும் இதில் கிடைக்கும். இந்த திட்டத்தை பற்றிய விரிவான தகவல்களை இங்கே காணாலாம்.

குழந்தைகள் எதிர்காலம்

நீண்ட கால முதலீட்டின் மூலம் உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக ஒரு பெரிய தொகையை சேமிக்க விரும்பினால், இந்தத் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். தற்போது இந்த திட்டத்தில் 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உங்கள் குழந்தையின் பெயரில் டெபாசிட் செய்தால், சரியான வயதில் உங்கள் குழந்தைக்கு மொத்தமாக 8 லட்சம் ரூபாய் என்ற பெரிய தொகை கிடைப்பதை நீங்கள் உறுதி செய்யலாம். 

இதற்கு என்ன செய்வது? எப்படி சேமிப்பது? இந்த கணக்கீட்டின் மூலம் இதை புரிந்து கொள்ளலாம். 

பிபிஎஃப் கணக்கின் மூலம் ரூ.8 லட்சத்துக்கும் மேல் சேர்ப்பது எப்படி? முழு கணக்கீடு இதோ

- பிபிஎஃப் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 முதலீடு செய்தால், ஒரு வருடத்தில் ரூ.12,000 முதலீடு செய்வீர்கள். 

- இந்தத் திட்டம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும், ஆனால் ரூ.8 லட்சம் சேர்க்க, 5 ஆண்டுகளுக்கான பிளாக்கில் இரண்டு முறை நீட்டிக்க வேண்டும்.

- தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு முதலீட்டைத் தொடர வேண்டும். 

- 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 முதலீடு செய்தால், மொத்தம் ரூ.3,00,000 முதலீடு செய்வீர்கள். 

- 7.1 சதவீத வட்டி விகிதத்தில், முதலீட்டாளர் வெறும் வட்டியின் மூலம் மட்டும் ரூ. 5,24,641 பெறுவார். 

- இந்த வழியில் உங்கள் முதிர்வுத் தொகை ரூ.8,24,641 ஆக இருக்கும்.

மேலும் படிக்க | ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடங்கியது! இதுவரை 11,000 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த நிறுவனங்கள்!

பங்களிப்புடன் நீட்டிப்பு எப்படி செய்வது?

PPF கணக்கு நீட்டிப்பு 5 வருடங்களுக்கான பிளாக்குகளில் செய்யப்படுகிறது. PPF நீட்டிப்பு விஷயத்தில், முதலீட்டாளருக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன - முதலில், பங்களிப்புடன் கணக்கு நீட்டிப்பு மற்றும் இரண்டாவது, முதலீடு இல்லாமல் கணக்கு நீட்டிப்பு. இதில் ரூ. 8 லட்சம் சேகரிக்கும் எண்ணத்தில் உள்ளவர்கள், பங்களிப்புடன் நீட்டிப்பு பெற வேண்டும். இதற்கு, நீங்கள் எங்கு கணக்கு வைத்திருக்கிறீர்களோ, அந்த வங்கி அல்லது தபால் நிலையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். முதிர்வு தேதியிலிருந்து 1 வருடம் முடிவதற்குள் இந்த விண்ணப்பத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். பிபிஎஃப் கணக்கை (PPF Account) நீட்டிக்க, ஒரு படிவம் நிரப்பப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். PPF கணக்கு தொடங்கப்பட்டுள்ள அதே தபால் அலுவலகம்/வங்கி கிளையில் படிவம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த படிவத்தை சரியான நேரத்தில் சமர்ப்பிக்க முடியாவிட்டால், உங்களால் கணக்கில் பங்களிக்க முடியாது.

மூன்று வழிகளில் வரிச் சேமிப்பும் இருக்கும்

PPF என்பது EEE வகை திட்டமாகும். இந்தத் திட்டத்தில் மூன்று வழிகளில் வரி விலக்கு பெறுவீர்கள். EEE என்றால் விலக்கு விலக்கு விலக்கு என்று பொருள். இந்த வகையின் கீழ் வரும் திட்டங்களில், ஆண்டுதோறும் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வரி இல்லை. இது தவிர, ஒவ்வொரு ஆண்டும் ஈட்டப்படும் வட்டிக்கு வரி இல்லை. மேலும், முதிர்வு நேரத்தில் பெறப்படும் முழுத் தொகைக்கும் வரி விலக்கு (Tax Free) கிடைக்கும். அதாவது முதலீடு, வட்டி/வருவாய் மற்றும் முதிர்வு ஆகிய மூன்றிலும் வரி சேமிப்பு (Tax Saving) கிடைக்கும். 

மேலும் படிக்க | Budget 2024: வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி... புதிய வீட்டு வசதி திட்டம் அறிமுகம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News