Budget 2024: தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா நிதியமைச்சர்?

Budget Expectations Of Industries: இன்றைய இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு துறையினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வாரா நிதியமைச்சர்? பட்ஜெட்டில் தொழில்துறையினரின் எதிர்ப்பார்ப்புகளின் சுருக்கமான பட்டியல்!

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 1, 2024, 11:09 AM IST
  • பட்ஜெட்டில் தொழில்துறையினரின் எதிர்ப்பார்ப்புகள்
  • எஃகுக்கு அதிக இறக்குமதி வரி விதிக்கப்படுமா?
  • ஆபரணங்களுக்கு இறக்குமதி வரி குறையுமா?
Budget 2024: தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா நிதியமைச்சர்? title=

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற வரவிருக்கும் நிலையில், மத்திய அரசு இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்கிறது. இடைக்கால பட்ஜெட்டாக இருந்தாலும், தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதாலும், தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஒரு அரசுக்கு எதிராக இயல்பாகவே இருக்கும் எதிர்ப்பு மனோநிலையையும் கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பது புரிந்துக் கொள்ளக்கூடியது.

தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்

வழக்கமாகவே பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் இறுதி பட்ஜெட்டில் மக்களுக்கான நலத்திட்டங்கள், வரிச்சலுகை என பல்வேறு துறைகளிலும் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவே அரசும், நிதியமைச்சரும் விரும்புவார்கள். 
 
பொருளாதார கட்டமைப்பு

நாட்டின் பொருளாதார கட்டமைப்பை வடிவமைக்க உறுதியளிக்கும் முக்கியமான அம்சங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைப்பார் என்பது பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்தநிலையில், பட்ஜெட் தொடர்பாக தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன.  உள்கட்டமைப்பு மேம்படுத்துவது முதல், இறக்குமதி வரி மாற்றங்கள் மற்றும் முக்கியமான வரி சீர்திருத்தங்கள் என தொழிலதிபர்கள் பல ஊக்குவிப்புகளை எதிர்பார்க்கின்றனர்.  
 
2024 இடைக்கால பட்ஜெட்டில் தொழில்துறையின் எதிர்பார்ப்புகள்

இந்த பட்ஜெட்டில், இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) உள்கட்டமைப்பு செலவினங்களை 20 சதவீதம் அதிகரிக்க வலியுறுத்துகிறது. இந்த துணிச்சலான அழைப்பு, நீட்டிக்கப்பட்ட உற்பத்தி ஊக்குவிப்பு மற்றும் இறக்குமதி வரிகளில் சரிசெய்தல் ஆகியவற்றுடன் இணைந்தது, அரசியல் மாற்றத்தின் முகத்தில் வளர்ச்சியைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பொருளாதார வரைபடத்திற்கான தொனியை அமைக்கிறது.

இந்தியாவின் பட்ஜெட் 2024க்கான முக்கிய முன்னுரிமைகளை இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry (CII)) கோடிட்டுக் காட்டுகிறது, வளர்ச்சிக்கான உத்வேகத்தை வழங்கும் பட்ஜெட்டாக இது இருக்க வேண்டும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. பட்ஜெட்டுக்கு முன்னர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டங்களில் தங்கள் எதிர்பார்ப்புகளையும் சிஐஐ முன்வைத்துள்ளது.

மேலும் படிக்க | Budget 2024: கடந்த பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் என்ன என்ன தெரியுமா?

முக்கிய துறைகளில் கவனம் செலுத்தி பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கை நடவடிக்கைகளை தொழில்துறை விரும்புகிறது. 

இடைக்கால பட்ஜெட்டில் தொழில்துறையினரின் முக்கிய எதிர்பார்ப்புகள் பல இருந்தாலும், அவற்றில் முக்கியமானவை உள்கட்டமைப்பு, உற்பத்தி மற்றும் இறக்குமதி வரிகள்...

இந்திய தொழில் கூட்டமைப்பு, முக்கியமான துறைகளை நிவர்த்தி செய்யும் ஒரு விரிவான திட்டங்களை முன்வைக்கிறது என்றால், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு The Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI)) புதிய உற்பத்தி வசதிகளுக்கான சலுகை வரிகள் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளது.  

எஃகுத் தொழிலை பொருத்தவரையில் சீனாவில் இருந்து இறக்குமதிகள் அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில், முடிக்கப்பட்ட எஃகு இறக்குமதி மீதான வரிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு நேர்மாறாக, ரத்தினங்கள் மற்றும் ஆபரணத் துறையில், இறக்குமதி வரி குறைக்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் நிறைவேறலாம்.  

ஆடைத்துறை, பொம்மைகள், இரசாயனங்கள், காலணிகள் தயாரிப்பு போன்ற மனித உழைப்பு அதிகமாக உள்ளத் துறைகளுக்கு உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (Production Linked Incentive (PLI)) திட்டம், விரிவாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.  ஏனென்றால், மூன்று அடுக்கு வரி கட்டமைப்பு தொடர்பான இறக்குமதி கட்டணங்கள், உள்ளீட்டு வரிகள் ஆகியவை உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையை மிகவும் அதிகமாக்கிவிடுகிறது. 

மேலும் படிக்க | Budget 2024: இந்த இடைக்கால பட்ஜெட் மூலம் சாமானியர்களின் இந்த பிரச்சனைகள் தீரும்!

இடைக்கால பட்ஜெட்டில் தொழில்துறை எதிர்பார்க்கும் முக்கியமான வரி சீர்திருத்தங்கள்  

பொருட்களை வாங்குவது மற்றும் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்றால்,  பணவீக்கத்துடன் இணைக்கப்பட்ட வரி விலக்கு வரம்பை, இந்த இடைக்கால பட்ஜெட்டில் அதிகரிக்க வேண்டும் என்று CII கேட்டுக் கொண்டுள்ளது. மூலதன ஆதாய வரி கட்டமைப்பில் நிலைத்தன்மைத் தேவை என்றும் கோரப்படுகிறது.  

இடைக்கால பட்ஜெட்டில் தொழில்துறை எதிர்பார்க்கும் சமூக செலவுகள்

சுகாதாரம் மற்றும் கல்விக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்பது பலரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. தற்போது நிலவும் செலவின இடைவெளிகளை நிவர்த்தி செய்து, சுகாதாரம் மற்றும் கல்வித்துறைக்கு அதிக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.  

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட், இந்தியாவின் தொழிற்துறைக்கு ஊக்கமளித்து பொருளாதாரத்தை ஆக்கப்பூர்வமாக கட்டமைக்கும் என்று தொழில்துறை எதிர்பார்க்கிறது.

மேலும் படிக்க | Budget 2024: இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கப்போகும் சலுகைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News