சுகன்யா சம்ரிதி யோஜனா : நாட்டின் பெண்களுக்காக அவ்வப்போது மத்திய மற்றும் மாநில அரசுகளால் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்கள் மூலம் பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற அரசு முயற்சிக்கிறது. அதேபோல், சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana – SSY) திட்டம் பெண்களுக்காக மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் திட்டமாகும். பெண் குழந்தைகளை தன்னிறைவு கொண்டவர்களாக மாற்ற மத்திய அரசின் மோடி அரசால் கடந்த 2015 ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. இது பெண் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்ற எதிர்கால திட்டங்களுக்கான சேமிப்புத் திட்டமாகும். இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.
பெண் குழந்தைகளின் எதிர்கால கல்வி மற்றும் பிற செலவுகளுக்காக ஒரு நிதியை உருவாக்க பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு சேமிப்புக்கான வாய்ப்பை வழங்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது தான் இந்த திட்டம். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட் பெண் குழந்தைகளுக்கு அந்த குழந்தையின் பெயரிலேயே கணக்கு தொடங்கி சேமிக்க முடியும். தபால் நிலையம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கி கிளைகளில் சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கை தொடங்கலாம்.
எனினும் இந்த திட்டம் யாருடைய பெயரில் தொடங்கப்பட்டிருக்கிறதோ அந்த பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழை வங்கியில் நாம் சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1. 50 லட்சம் ரூபாய் வரை பணத்தை நாம் செலுத்தலாம். இந்த திட்டத்தில் தற்போது 8.2 வட்டி வழங்குகிறது. அவ்வப்போது அரசாங்கத்தால் வட்டி விகிதங்கள் மாற்றப்படும்.
மேலும் படிக்க | கிரெடிட் கார்ட் விதிகளில் முக்கிய மாற்றம்: சுற்றறிக்கை வெளியிட்ட RBI
அதுநாட்டுமின்றி உங்கள் பெண் குழந்தைக்கு 15 வயது எட்டும் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதன் பின்னர், 18 வயது எட்டியதும் 50 சதவீத தொகையை எடுத்துக் கொள்ள முடியும். பின்னார் கணக்குத் துவங்கி 21 ஆண்டுகளுக்கு போராக்கு மொத்த தொகையும் எடுத்துக் கொள்ள முடியும். இந்த திட்டத்தில் 2 மகள்களுக்கு மட்டுமே கணக்கு தொடங்க முடியும்.
2000 டெபாசிட் செய்தால் எவ்வளவு கிடைக்கும்?
நீங்கள் சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000 தொகையை முதலீடு செய்தால், முதிர்ச்சிக்கு பின் வட்டியுடன் எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
மாதம் இரண்டாயிரம் ரூபாய் டெபாசிட் செய்தால், ஆண்டு முதலீடு 24 ஆயிரம் மற்றும் 15 ஆண்டுகளில் இந்த முதலீடு 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஆகும். மேலும் 21 ஆண்டுகள் முதிர்ச்சியடைந்த பிறகு, இத்திட்டத்தின் கீழ் மகளின் கணக்கில் ரூ.1109224 தொகை செலுத்தப்படும். எனினும் வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களால் தொகை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். தற்போதைய வட்டி விகிதங்களின்படி இந்தக் கணக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதங்களில் மாற்றம் ஏற்பட்டால் கணக்கீட்டில் மாற்றம் ஏற்படும்.
5 ஆயிரம் முதலீட்டில் எவ்வளவு கிடைக்கும்?
நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் உங்கள் தொகை ரூ. 9 லட்சமாக மாறும், முதிர்ச்சியின் போது, தற்போதைய வட்டி விகிதத்தின்படி ரூ.27,73,059 உங்கள் மகளின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ