இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமான ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப் லிமிடெட்(ஹெச்டிஎஃப்சி) அதன் சில்லறை முதன்மை கடன் விகிதத்தை (ஆர்பிஎல்ஆர்) கடன் வாங்குபவர்களுக்கு 5 அடிப்படை புள்ளிகளை(பிபிஎஸ்) உயர்த்தியுள்ளது. இதன் மூலம் இந்த வங்கி ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக வீட்டு கடன் வட்டிகளை உயர்த்தியுள்ளது. ஒரு அடிப்படை புள்ளி என்பது ஒரு சதவீத புள்ளியில் நூறில் ஒரு பங்கு ஆகும். சமீபத்திய அதிகரிப்பின்படி, 780க்கு மேல் கிரெடிட் ஸ்கோரை கொண்ட கடனாளியின் குறைந்தபட்ச விகிதம் 7%ல் இருந்து 7.05% ஆக உள்ளது.
மேலும் படிக்க | Money Tips: 786 தொடரின் ரூபாய் நோட்டு இருந்தால் லட்சங்களை அள்ளலாம்
நாட்டில் உள்ள 10 நிதியளிக்கப்பட்ட வீடுகளில் நான்கிற்கு நிதியளிக்கும் ஹெச்டிஎஃப்சி, தற்போது கடன் வழங்குபவர்களுக்கான வட்டி விகிதங்களை ஒட்டுமொத்தமாக 40 பிபிஎஸ் அதிகரித்துள்ளது. கடந்த மே-1 அன்று ஹெச்டிஎஃப்சி அதன் விகிதத்தை 5 பிபிஎஸ் உயர்த்தியது, அடுத்ததாக மே-7 அன்று 35 பிபிஎஸ் அதிகரித்தது. இந்திய ரிசர்வ் வங்கியின் 40 பிபிஎஸ் உயர்வை தொடர்ந்து ரெப்போ மதிப்பு மே-4 அன்று 50 பிபிஎஸ் ஆக அதிகரித்தது. ரெப்போ மதிப்பு என்பது ரிசர்வ் வங்கியிடம் இருந்து மற்ற வங்கிகள் கடன் பெறும் விகிதமாகும்.
வட்டி அதிகரிப்புப்படி, கடன் வாங்குபவர்களின் கிரெடிட் ஸ்கோர் மதிப்பு 780க்கு குறைவாக இருந்தால் ரூ.30 லட்சம் வரையிலான கடனுக்கு 7.15%, ரூ.30 முதல் ரூ.75 லட்சம் வரையிலான கடனுக்கு 7.40% செலுத்த வேண்டும். ரூ.75 லட்சத்திற்கும் மேல் உள்ள கடனுக்கு 7.50% வசூலிக்கப்படும். ஹெச்டிஎஃப்சி-யில் பெண்கள் எந்த கடன் வாங்கினாலும் அவர்களுக்கு 5 பிபிஎஸ் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கியில் குறைந்த காலத்தில் அதன் கடன் விகிதத்தை 30 பிபிஎஸ் ஆக உயர்த்தியுள்ளது.
மேலும் படிக்க | SBI வீட்டுக்கடன் விலைகள் உயர்ந்தன: ஜூன் மாத விலையுயர்வுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR