8th Pay Commission: 8வது ஊதியக்குழு தொடர்பான அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஏனெனில் அது அவர்களின் சம்பளம் மற்றும் பிற சலுகைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கும் இதன் மூலம் ஓய்வூதியத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். இருப்பினும், 8வது ஊதியக் குழுவை செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த அறிகுறியையும் வழங்கவில்லை.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றமா, சர்ப்ரைஸா?
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை திருத்துவதற்கு புதிய ஊதியக் குழுவை அமைப்பதற்கு பதிலாக, செயல்திறன் அடிப்படையிலான சம்பளத் திருத்தங்கள் (Performance Based Pay Revision) அல்லது பிற வழிமுறைகளை அறிமுகப்படுத்தலாம் என்று பரிந்துரைக்கும் திட்டங்கள் அரசிடன் உள்ளன. இறுதி முடிவவை அரசாங்கம் இன்னும் எடுக்கவில்லை என்றே தெரிகிறது. இரண்டு சாத்தியக்கூறுகள் இருக்கலாம்.
- ஊதியக்குழுவிற்கான வழக்கமான முறையே தொடரப்பட்டால், 8வது ஊதியக்குழு உடனடியாக அமைக்கப்பட்டு, துரித கதியில் பணிகள் நடந்து, ஜனவரி 2026-க்குள் இது அமலுக்கு வருவது உறுதிபடுத்தப்பட வேண்டும்.
- சம்பள கமிஷனுக்கு பதிலாக, வேறு முறையை செயல்படுத்த அரசு முடிவு செய்தால், அதற்கான விரிவான வரைவு பட்ஜெட் நேரத்தில் அளிக்கப்பட்டு அதன் பின் அதற்கான பணிகள் நடக்க வாய்ப்புள்ளது.
Salary, Pension: ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் நல்ல அதிகரிப்பு
ஊதியக்குழுவை அமைக்க அரசு முடிவு செய்வதாக இருந்தாலும், அல்லது சம்பள உயர்வைத் தீர்மானிக்க அரசாங்கம் வேறு சூத்திரத்தை அறிமுகம் செய்தாலும், ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் கண்டிப்பாக நல்ல அதிகரிப்பு இருக்கும் என நம்பப்படுகின்றது. இந்த உயர்வு எவ்வளவு இருக்கும் என்பதை அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர். முந்தைய இரண்டு சம்பளக் குழுக்கள் அரசு வேலைகளுடன் தொடர்புடைய சம்பளம் மற்றும் சலுகைகளில் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான மாற்றங்கள் குறித்த தகவல்களை வழங்குகின்றன.
Aykroyd formula
அய்க்ரியோட் ஃபார்முலாவை ஊதிய உயர்வு கணக்கீட்டிற்கு பயன்படுத்துவது பற்றி அரசாங்கம் இப்போது சிந்தித்து வருவதாக கூறப்படுகின்றது. இந்த புதிய ஃபார்முலா ஊழியர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படி மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும் என நம்பபடுகின்றது.
இனி அரசு ஊழியர்கள் சம்பள திருத்தத்திற்காக 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருக்காது. தனியார் துறை ஊழியர்களை பேல வருடா வருடம் சம்பள உயர்வு இருக்கும் என கூறப்படுகின்றது. புதிதாக வரும் முறை கண்டிப்பாக 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை விட அதிக நன்மைகளை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும் என்றே நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 -இல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு
8வது சம்பளக் குழுவை அரசாங்கம் உடனடியாக அறிவிக்கும் என்று தொழிற்சங்கங்கள் எதிர்பார்க்கின்றன. வரவிருக்கும் 2025 பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடும் அறிவிப்புகளை மத்திய அரசு ஊழியர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1, 2025 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
மேலும் படிக்க | கிராஜுவிட்டி விதிகள்... 5, 7, 10 ஆண்டுகள் சர்வீஸுக்கு கிடைக்கும் பணிக் கொடை எவ்வளவு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ