விஸ்வகர்மா திட்டம் : சுய தொழில் செய்கிறீர்களா? உங்களுக்கான குட்நியூஸ்..!

PM Vishwakarma Yojana | மத்திய அரசின் பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது? என தெரிந்து கொள்ளுங்கள்

மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா (PM Vishwakarma Yojana) திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார் என்பதை எப்படி என தெரிந்து கொள்வோம்.

1 /11

பெண்கள், இளைஞர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கி தொழில் முனைவோர்களாக மாற மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி கடனுதவி வழங்கி வருகிறது. அந்த வகையில் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட திட்டம் பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா (PM Vishwakarma Yojana).

2 /11

‘பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தின் மூலம் கைவினைக் கலைஞர்கள் எந்த உத்தரவாதமும் இல்லாமல் 5% என மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் மத்திய அரசின் கடனுதவியைப் பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் 5% வட்டியில் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான கடனைப் பெற்றுக் கொள்ளலாம்.

3 /11

பி.எம் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.1 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இந்தக் கடனை 18 மாதங்களுக்குள் சரியாக திருப்பிச் செலுத்திய பிறகு விண்ணப்பதாரர் மீண்டும் ரூ. 2 லட்சம் கடன் பெறுவதற்கு தகுதி பெறுகிறார். இதற்கு 5% மட்டுமே வட்டி கணக்கிடப்படுகிறது.

4 /11

மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான கருவிகளை வாங்கவும், 15,000 மதிப்பிலான வவுச்சரை பெறுகின்றனர். பயனாளிகள் தங்கள் பணி தொடர்பான உபகரணங்களை வாங்கிக் கொள்வதற்கு இந்த வவுச்சரைப் பயன்படுத்தி கருவிகளை வாங்கிக் கொள்ளலாம்.  

5 /11

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு தொழில் செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது. தச்சர், பொற்கொல்லர், கொல்லர், கொத்தனார், கல் சிற்பி, முடிதிருத்தும் தொழில் செய்பவர்கள், மீனவர்கள் போன்றவர்கள் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மூலம் கடன் பெறலாம்.

6 /11

மத்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, 2.59 கோடி பேர் இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்துள்ளனர். சுமார் 23.97 லட்சம் விண்ணப்பதாரர்களின் பதிவு முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

7 /11

பி.எம் விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஒரு நபர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். PMEGP, PM SVANidhi மற்றும் முத்ரா கடன் ஆகிய திட்டங்களின் மூலம் ஏற்கனவே கடனைப் பெற்றிருக்கக் கூடாது.

8 /11

விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு, பான் கார்டு, அடையாளச் சான்று, இருப்பிட சான்று, மொபைல் நம்பர், சாதி சான்றிதழ் போன்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.  

9 /11

தையல் தைப்பவர், துடைப்பம் செய்பவர், கொல்லர்கள், கூடை செய்பவர், தச்சர், பாய் செய்பவர்கள், பொற்கொல்லர்கள், பொம்மைகள் செய்பவர்கள், காலனி செய்பவர்கள், படகு தயாரிப்பவர்கள், மீன்பிடி வலை செய்பவர்கள் ஆகியோரும் பி.எம். விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் விண்ணப்பித்து 5% வட்டியில் மத்திய அரசின் கடனுதவி பெறலாம்.

10 /11

பி.எம் விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?: முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmvishwakarma.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். உங்கள் மொபைல் நம்பர் மற்றும் ஆதார் கார்டைப் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். பின்னர் OTP சரிபார்ப்பு மூலம் மொபைல் நம்பர் மற்றும் ஆதார் கார்டை சரிபார்க்கவும். அதன் பிறகு பதிவு படிவத்தில் உங்கள் பெயர், முகவரி, வணிகம் போன்ற தேவையான விவரங்களுடன் பூர்த்தி செய்யுங்கள்.

11 /11

தேவையான ஆவணங்களை பதிவேற்றுங்கள். உங்கள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டதும் கடன் அங்கீகரிக்கப்பட்டு உங்கள் வங்கிக் கணக்கில் கடன் தொகை வரவு வைக்கப்படும். பி.எம் விஸ்வகர்மா யோஜனா திட்டம் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் திறன்களின் அடிப்படையில் பயிற்சியும் வழங்கி அந்த பயிற்சி காலத்தில், தினசரி உதவி தொகையாக 500 ரூபாயும் வழங்கி மேற்கொண்டு தங்கள் தொழிலுக்கு தேவைப்படும் உபகரணங்களை வாங்குவதற்காக 15,000 ரூபாயை வழங்குகிறது.