புதுடெல்லி: இந்தியாவின் வட மாநிலங்களில் தீபாவளிக்கு (Diwali) முந்தைய நாள் ‘தன்தேரஸ்’ என்று கொண்டாடப்படுகின்றது. அக்ஷய திரிதியைப் போல இந்த நாளில் வாங்கும் பொருட்களும், செய்யும் காரியங்களும் பன் மடங்காகப் பெருகும் என்பது ஐதீகம். வட மாநிலங்களில் இந்நாளில் தங்கம் வாங்குவதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தன்தேரசுக்கு முன்னர், ‘இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank) வெளியிட்டுள்ள 2020-21 ஆம் ஆண்டின் சோவரின் தங்கப் பத்திரத்தின் (Sovereign Gold Bond) எட்டாவது தவணை, நவம்பர் 9 திங்கள் முதல் 13 வரை சந்தாவுக்காக திறக்கப்படும். ஒரு கிராம் தங்கத்திற்கு விலை ரூ .5,177 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ALSO READ: இனி தபால் நிலையத்திலும் ஆன்லைன் பணப்பரிவர்தனை செய்யலாம்..!
"999 தூய்மை தங்கத்திற்கான எளிய சராசரி நிறைவு விலையின் அடிப்படையில் (இந்தியா புல்லியன் அண்ட் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் லிமிடெட் (ஐபிஜேஏ)) வெளியிட்டுள்ள பத்திரத்தின் பெயரளவு மதிப்பு, ஒரு கிராம் தங்கத்திற்கு 5,177 ரூபாயாக இருக்கும்” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2020-21 ஆம் ஆண்டின் சோவரின் தங்கப் பத்திரத்தின் சீரிஸ் VIII மூலம் நீங்கள் எப்படி மலிவான விலையில் தங்கத்தை வாங்குவது?
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு பெயரளவிலான மதிப்பை விட குறைவாக, கிராமுக்கு ரூ .50 தள்ளுபடியை ரிசர்வ் வங்கி வழங்கும். மேலும் விண்ணப்பத்திற்கான கட்டணம் டிஜிட்டல் முறை மூலம் செய்யப்படுகிறது.
"அத்தகைய முதலீட்டாளர்களுக்கு, தங்க பத்திரத்தின் வெளியீட்டு விலை ஒரு கிராம் தங்கத்திற்கு (Gold) ரூ .5,127 ஆக இருக்கும்" என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அக்டோபர் 12 முதல் அக்டோபர் 16 வரை சந்தாவிற்காக திறந்திருந்த பத்திரங்களுக்கான (தொடர் VII) வெளியீட்டு விலை ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ .5,051 ஆக இருந்தது.
ALSO READ: தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி..!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR