Budget 2025 Expectations: கடந்த மார்ச் 9, 2024 முதல் வீட்டு உபயோகமாக, சமையலுக்கு பயன்படுத்தும், எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. பொதுத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.100 குறைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போதையை பட்ஜெட்டில், கோடிக்கணக்கானோர் பயன்பெறும் வகையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைவதற்கு உதவும் அறிவிப்பு ஏதேனும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எல்பிஜி விலையில் மாற்றம் இல்லாமல் இருப்பதற்கான காரணம்
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக சமையல் LPG விலையை அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது. ஆனால், சமையல் எல் பிஜி சிலிண்டர் உற்பத்தி தேவைக்கு போதுமான அளவில் இல்லாததால், எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் எல்பிஜியின் அதிக விலையால் நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்திக்கின்றன.தனால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான ஐஓசி, பிபிசிஎல் மற்றும் ஹெச்பிசிஎல் ஆகியவற்றுக்கு அவ்வப்போது அரசாங்கம் இந்த இழப்பை ஈடுசெய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு வழங்கும் மானியத்தின் நோக்கம்
மக்கள் நலன்: நடுத்தர வர்க்கம் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக மானிய ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுகிறது.
பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆதரவு: எண்ணெய் நிறுவனங்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்கிறது. இதன் மூலம் அவை தடையின்றி எல்பிஜி விநியோகத்தை பராமரிக்க உதவுகிறது.
உலகளாவிய சந்தை சவால்கள்: அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் மூலப்பொருள் செலவுகளுக்கு மத்தியில், அரசாங்கத்தின் தலையீடு உலகளாவிய விலை உறுதியற்ற தன்மையிலிருந்து உள்நாட்டு சந்தைகளைப் பாதுகாக்க உதவுகிறது.
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கும் 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுகளுக்கு இழப்பீடாக ரூ.22,000 கோடி வழங்கப்பட்டது. ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்த ரூ.28,249 கோடி என்ற இழப்பை விடக் குறைவான அளவே வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் மொத்த இழப்பான ரூ.40,500 கோடியில், ஐஓசி ரூ.19,550 கோடியும், ஹெச்பிசிஎல் ரூ.10,570 கோடியும், பிபிசிஎல் ரூ.10,400 கோடியும் இழப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட். (IOC), பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட். (HPCL) போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 35,000 கோடி ரூபாய் மதிப்பிலான LPG மானியதை அரசு வழங்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 2024-25 நிதியாண்டில் சமையல் எல்பிஜி விற்பனையில் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட இந்த மானியம் வழங்கப்பட வாய்ப்புள்ளது என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பெரும் நஷ்டத்தை சந்தித்த நிறுவனங்கள்
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், 2024 மார்ச் முதல், மூலப்பொருட்களின் விலை அதிகரித்த போதிலும், 14.2 கிலோ எடையுள்ள சமையல் எல்பிஜி சிலிண்டரின் விலையை சிலிண்டருக்கு ரூ.818 என்ற விலையை மாற்றாமல் வைத்துள்ளன. இதன் காரணமாக, அவர்கள் எல்பிஜி விற்பனையில் நஷ்டத்தை சந்தித்துள்ளனர் மற்றும் ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் அவர்களின் வருவாய் குறைந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு சுமார் ரூ.40,500 கோடியாக இருக்கும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் ஈடாக இரண்டு நிதியாண்டுகளுக்கு மொத்தம் ரூ.35,000 கோடியை அரசு வழங்கக் கூடும் என கூறப்படுகிறது.
நடப்பு 2024-25 நிதியாண்டில் ரூ.10,000 கோடி பெற வாய்ப்பு
IOC, BPCL மற்றும் HPCL ஆகியவை நடப்பு 2024-25 நிதியாண்டில் ரூ.10,000 கோடியையும், அடுத்த நிதியாண்டில் மீதமுள்ள ரூ.25,000 கோடியையும் பெற வாய்ப்புள்ளது என்றார். பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இந்த மானியத்தை அரசாங்கம் வழங்கலாம். இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மற்றம் இருக்குமா, சிலிண்டர் விலை குறையுமா என்பதை அறிந்து கொள்ள பிப்ரவரி1ம் தேதி வரை பொறுத்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க | Pongal 2025: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை - அரசின் கடைசி நேர அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ