EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு மிகப்பெரிய செய்தி வெளியாகியுள்ளது. தொழிற்சங்கங்கள் 2025-26 பட்ஜெட்டில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் செயல்படும் ஊழியர்கள் ஓய்வூதிய அமைப்பு, அதாவது EPS -இன் படி அளிக்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ஐந்து மடங்கு அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. இது தவிர, 8வது ஊதியக் குழுவை உடனடியாக உருவாக்க வேண்டும், பெரும் பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்கப்பட வேண்டும் போன்ற பிற கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்த கோரிக்ககள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Union Budget 2025: 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்
2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சரும், நிதி அமைச்சக அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பல்வேறு துறைகளை சார்ந்த பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
Trade Unions: தொழிற்சங்கங்களின் கோரிக்கை
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான தங்களது வழக்கமான பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில், தொழிற்சங்க தலைவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றில் சில:
- Minimum Monthly Pension: இபிஎஸ் -இன் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை ரூ.1000 -இலிருந்து ரூ.5000 ஆக அதிகரிக்க வேண்டும்.
- Income Tax Exemption: வருமான வரி விலக்கு வரம்பை ஆண்டுக்கு 10 லட்சமாக உயர்த்த வேண்டும்
- Social Security Scheme: தற்காலிக ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
- Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வர வேண்டும்.
- 8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு விரைவில் 8வது ஊதியக்குழுவை அமைக்க வேண்டும்.
கூட்டத்திற்குப் பிறகு தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் (டியுசிசி) தேசிய பொதுச் செயலாளர் எஸ்.பி.திவாரி, "பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையை நிறுத்திவிட்டு, அமைப்புசாராத் துறை தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு நிதியை திரட்ட பெரும் பணக்காரர்களுக்கு கூடுதல் 2 சதவீத வரி விதிக்க வேண்டும். விவசாயத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்குவதோடு, அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தையும் நிர்ணயம் செய்ய வேண்டும்." என பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
பாரதிய மஸ்தூர் சங்க அமைப்புச் செயலர் (வடக்கு மண்டலம்) பவன் குமார், "ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 1995 (இபிஎஸ்-95) இன் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை தற்போதுள்ள மாதம் ரூ.1,000 லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும், VDA (மாறும் அகவிலைப்படி) அதனுடன் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளோம்" என்று கூறினார். வருமான வரி விலக்கு வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். மேலும், ஓய்வூதிய வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
EPS Pension: இபிஎஸ் ஓய்வூதியத்தில் ஏற்றம்
தொழிற்சங்கங்கள் 2025-26 பட்ஜெட்டில் EPFO இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 5 மடங்கு அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளன. இதற்கான கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 2014 முதல், மத்திய அரசு இபிஎஸ்-95 ஓய்வூதிய நிதியின் கீழ் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக 1000 ரூபாய் நிர்ணயித்துள்ளது. ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை மாதம் 7500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தற்போது அதை குறைந்தபட்சம் ரூ.5000 ஆக உயர்த்த விரைவில் அரசு ஒரு தீர்வை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ