Pongal Incentive | ரேஷன் கடை ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

Ration Shop Employees Pongal Incentive News:  விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை குறித்து முக்கிய அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Pongal Incentive Latest News: ரேஷன் கடை ஊழியர்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 காசுகள் ஊக்கத்தொகையாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. 

1 /9

ரேஷன் கடை ஊழியர்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 காசுகளை ஊக்கத்தொகையாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதுக்குறித்து பார்ப்போம். 

2 /9

ரேஷன் கடை ஊழியர்களாக பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவுத் துறை உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

3 /9

அதாவது தமிழக அரசு பொங்கல் ஊக்கத்தொகை அறிவிப்பு வெளியிட்டு இருக்கக்கூடிய சூழலில், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் ஒவ்வொரு அட்டைக்கும் 50 காசுகள் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

4 /9

ரேஷன் கடைகளில் பணிபுரியும்  ஊழியர்களின் வங்கிக் கணக்கில் பொங்கல் ஊக்கத்தொகை வரவு வைக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

5 /9

தமிழ்நாட்டை பொறுத்த வரை ஒரு ரேஷன் கடைக்கு சுமார் 1,500 முதல் 2,000 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இதன் மூலம், விற்பனையாளர்களுக்கும், கட்டுநர்களுக்கும் சுமார் ரூ. 750 முதல் ரூ. 1,000 வரை ஊக்கத்தொகையாக கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

6 /9

முன்னதாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக் தமிழக அரசு சார்பில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

7 /9

2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம் கடந்த ஜனவரி 3-ம் தேதி தொடங்கியது. இதுவரை 95 சதவீதம் பேருக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

8 /9

இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்பு என்பது, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மட்டுமல்லாமல், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படுகிறது.

9 /9

நாளை (ஜனவரி 8) தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டை 169-வது வார்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.