Coronavirus infection: கொரோனாவைத் தவிர்க்க வெளியில் அதிகமாக சுற்றாமல் வீடுகளில் தங்குவது நல்லது. ஏறக்குறைய மூன்று மாதங்கள் நாடு முழுவதும் ஊரடங்கு கடுமையான விதிக்கப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம், இந்த ஊரடங்கு காலத்தில் மக்களை வீடுகளில் தங்கி இருக்க வேண்டும். அதன் கொரோனாவின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதாகும். ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு ஆய்வில், இதற்கு நேரெதிராக அறிக்கையை கூறியுள்ளது. அதாவது வெளியில் இருப்பதை விட வீட்டில் வசிக்கும் மக்கள் தான் கோவிட் -19 தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு (Centers for Disease Control and Prevention-CDC) மையங்களில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் (Coronavirus) பாதிக்கப்பட்ட 5,706 நோயாளிகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதாக அந்த அறிக்கை கூறியுள்ளது. 5706 நோயாளிகளுடன் தொடர்பு கொண்ட 59,000 பேர் இதில் அடங்குவர்.
100 பேரில் இரண்டு பேர் மட்டுமே வீட்டிற்கு வெளியே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. அதேசமயம் 10 பேரில் ஒருவருக்கு வீட்டில் தங்கி இருந்தவர்க்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள்.
ALSO READ | இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு எவ்வளவு செலவாகும்? - இதோ பதில்..
குழந்தை மற்றும் வயதானவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கொரியா நோய் கட்டுப்பாட்டு மையம்-கே.சி.டி.சி (Korea Centers for Disease Control-KCDC) இயக்குனர் டாக்டர் ஜியோங் யூன் கியோங் (Jeong Eun kyeong) மேற்கோளிட்டுள்ளார். அவர்களுக்கு அதிக பாதுகாப்பு அல்லது உதவி தேவை. அதன்மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் கொரோனா வைரஸின் தீவிரத்தன்மை குறைவு என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஜனவரி 20 முதல் மார்ச் 27 வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த நேரத்தில், தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று முழு உச்சத்தில் இருந்தது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் (Coronavirus in India) தொற்று வேகமாக பரவுகிறது என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம். நாட்டில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது.
ALSO READ | Corona News: கொசுக்களால் பரவாது கொரோனா! மழைக்காலத்தில் ஒரு நற்செய்தி!!