வாஷிங்டன்: உக்ரைனில் ஸ்டார்லிங்க் இன்டர்நெட் வசதிகளுக்கு செலவாகும் தொகையை நிதியுதவியாக வழங்க வேண்டும் என்ற நிதிக் கோரிக்கையை ஸ்பேஸ்எக்ஸ் திரும்பப் பெறுவதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் உள்ள எலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வலையமைப்பிற்கு பணம் செலுத்துவது தொடர்பாக பென்டகன் பரிசீலிப்பது பற்றி இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, பிரபல செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவை எதிர்த்துப் போராடும் உக்ரைனுக்கு ஆதரவாக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்டார்லிங் செயல்பாட்டிற்கு ஆகும் செலவை ஸ்பேஸ்எக்ஸ் காலவரையின்றி ஏற்றுக் கொள்ல முடியாது என்று மஸ்க் வெள்ளிக்கிழமையன்று கூறியிருந்தார், ஆனால், இது தொடர்பாக எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் நிறுவனம், தனது முடிவில் இருந்து பின்வாங்கி இருக்கிறது.
SpaceX to continue funding Starlink Internet in Ukraine, withdraws Pentagon funding request: Elon Musk
Read @ANI Story | https://t.co/mZNK8cINjx#ElonMusk #SpaceX #Ukraine pic.twitter.com/zmJiJdU5br
— ANI Digital (@ani_digital) October 18, 2022
தற்போது எலோன் மஸ்க் பதிவிட்டுள்ள ஒரு ட்வீட்டில், ஸ்பேஸ்எக்ஸ் நிதியுதவிக்கான தனது கோரிக்கையை ஏற்கனவே திரும்பப் பெற்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். உலகின் மிகப் பெரிய பணக்காரரும், டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான மஸ்க், சமீபத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உக்ரைனில் செயற்கைக்கோள் சேவைகளைப் பராமரிப்பது தொடர்பான சர்ச்சைகளின் மையப்புள்ளியாக மாறியுள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், உக்ரைனில் ஸ்டார்லிங்கிற்காக, கிட்டத்தட்ட $20 மில்லியன் தொகையை மாதந்தோறும் செலவழிக்கிறது என்றும், அங்கு ஸ்டார்லிங்கை இயக்குவதற்கும் ஆதரிக்கவும் நிறுவனம் சுமார் $80 மில்லியனைச் செலவிட்டுள்ளது என்றும் எலோன் மஸ்க் தெரிவித்திருந்தார்.
The hell with it … even though Starlink is still losing money & other companies are getting billions of taxpayer $, we’ll just keep funding Ukraine govt for free
— Elon Musk (@elonmusk) October 15, 2022
"துல்லியமாகச் சொல்வதானால், 25,300 டெர்மினல்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டன, ஆனால், தற்போது, 10,630 சேவைக்கு மட்டுமே பணம் கிடைக்கிறது" என்று மஸ்க் ட்வீட் செய்துள்ளார். ஸ்டார்லிங்க், ரஷ்யா தொடுத்த போரின் போது உக்ரைனின் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினருக்கு ஆன்லைனில் உதவியது, உக்ரைனின் துணைப் பிரதமர் மைக்கைலோ ஃபெடோரோவ் கடந்த வாரம் ஸ்டார்லிங்கின் சேவைகள் முக்கியமான பகுதிகளில் ஆற்றல் மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை மீட்டெடுக்க உதவியது என்று கூறினார்.
மேலும் படிக்க | கோவிடிலும் தில்லுமுல்லு செய்த டிரம்ப்! கிடுக்கிப்பிடி விசாரணையில் அமெரிக்க முன்னாள் அதிபர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ