Ghanim Al Muftah Viral Video: தன்னம்பிக்கையின் சிகரம் யூடியூபர் கானிம் அல் முஃப்தா வீடியோ வைரல்

Qatari YouTuber Ghanim Al Muftah Video Viral: மாற்றுத்திறனாளியான யூடியூபர் கானிம் அல் முஃப்தா, உடற்பயிற்சி செய்யும் வீடியோ வைரல்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 23, 2022, 03:52 PM IST
  • யூடியூப் பிரபலம் கானிம் அல் முஃப்தா
  • உடலின் கீழ் பாதி இல்லாமல் பிறந்த மாற்றுத்திறனாளி
  • மாற்றுத்திறனாளி சாதனையாளர் கானிம் அல் முஃப்தா
Ghanim Al Muftah Viral Video: தன்னம்பிக்கையின் சிகரம் யூடியூபர் கானிம் அல் முஃப்தா வீடியோ வைரல் title=

கத்தாரின் உலகக் கோப்பை தொடக்க விழாவில் அனைவரையும் கவர்ந்த ஒரு நட்சத்திரத்தின் எழுச்சியூட்டும் கதை இது. யூடியூபர் கானிம் அல் முஃப்தா, 20 வயதான இந்த இளைஞர், பிறப்பிலேயே குறைபாட்டுடன் பிறந்தார். பாதி உடலுடன் பிறந்த இவர், மத்திய கிழக்கின் மிகவும் நம்பிக்கையான மனிதர்களில் ஒருவர் என்று சர்வதேச அளவில் பிரபலமாகியிருக்கிறார். இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று அனைவரின் மனதையும் கவர்ந்து வைரலாகிறது. இந்த இளைஞர், லாஃப்பரோவில் அரசியல் படிக்க வேண்டும், பாராலிம்பியனாக வேண்டும் என்று கனவு காண்கிறார். காணும் கனவை நனவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் கானிம் அல் முஃப்தா.

யூடியூப் பிரபலமான கானிம் அல் முஃப்தா, பிறக்கும்போதே உடலின் கீழ் பாதி இல்லாமல் பிறந்தார். கத்தார் உலகக் கோப்பை போட்டிகளின் தொடக்க விழாவில் மோர்கன் ஃப்ரீமேனுடன் மேடைக்கு வந்தார். கால்கள் இல்லாவிட்டாலும், தன்னம்பிக்கை மற்றும் முயற்சியால் இந்த கத்தார் இளைஞர் மலை ஏறி சாதனை படைத்துள்ளார் என்பது இவரின் நம்பிக்கையின் உச்சத்திற்கு ஒரு சிறிய உதாரணம்.

இவர் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள உடற்பயிற்சி வீடியோ நெட்டிசன்களால் தொடர்ந்து பார்க்கப்பட்டு வைரலாகிறது.  @g_almuftah என்ற தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

East Meet West என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், வெளிநாட்டு மாற்றுத் திறனாளியுடன் அவர் இணைந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ கலக்கலாக இருக்கிறது.  உலகக் கோப்பையின் தொடக்க விழாவில் ஹாலிவுட் ஏ-லிஸ்டர் மோர்கன் ஃப்ரீமேனுடன் இணைந்து தோன்றிய மாற்றுத்திறனாளியும் இவரே. 

மேலும் படிக்க | தாலிபானுக்கு நிகராக தண்டனை - அப்பாவி சிறுவனை கட்டிவைத்து அடித்த கொடூரம்

20 வயதான கானிம் அல் முஃப்தா, காடல் ரிக்ரஷன் சிண்ட்ரோம் (CRS) என்ற மிகவும் அரிதான மரபணு நிலையால் பாதிக்கப்பட்டு, உடலின் கீழ் பாதி இல்லாமல் பிறந்தார்.

இரட்டைக் குழந்தைகளில் ஒருவராக 2002 மே 5ம் தேதியன்று பிறந்த அவர், பிறந்த உடன் அனைவருக்கும் அதிர்ச்சியையும் கவலையையும் அளித்தாலும், வளரும்போது, தன்னம்பிக்கையின் சிகரமாக உயர்ந்தார். பிரபலமான உதாரணமாக காட்டப்படும் அளவுக்கு வளர்ந்த கானிம் அல் முஃப்தா, சமூக ஊடகங்களில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை வைத்துள்ளார் என்பது அவரது பிரபலத்துக்கு போதுமான சான்று.

மேலும் படிக்க | அமெரிக்காவில் வால்மார்ட் கடையில் 10 பேர் சுட்டுக் கொலை! வெர்ஜீனியா துப்பாக்கிச்சூடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News