சீனா தனது பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ், உலக நாடுகளை கடன் வலையில் சிக்க வைக்கிறது. ஜி ஜின்பிங்கின் இந்த கனவு திட்டத்தில் சிக்கி இந்தியாவின் பல அண்டை நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவின் கடனில் சிக்கியுள்ள இலங்கை, திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டது. பாகிஸ்தான் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிர்க்கிறது. அண்டை நாடுகளை தன் பிடிக்குள் வைத்துக் கொள்ள, அவர்களுக்கு அதிக அளவில் கடன்களை அள்ளிக் கொடுத்து, அவர்களை அதிலிருந்து மீள முடியாத போது, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதே சீனாவின் திட்டம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா தனது BRI திட்டத்தின் கீழ் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை பாகிஸ்தானில் உருவாக்கி வருகிறது. இந்தோனேசியாவிற்கு அருகில் உள்ள மலாக்கா ஜலசந்தியைப் பயன்படுத்தி இந்திய மற்றும் அமெரிக்க கடற்படை சீனாவை ஆதிக்கம் செலுத்த விடக் கூடாது என்பது சீனாவின் முயற்சி. அதனால் தான் CPEC என்னும் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் என்னும் திட்டத்தை விரைவில் முடிக்க விரும்புகிறது. இப்போது பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார், அங்கு அவர் பிடனுடன் CPEC மற்றும் BRI குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம்.
PoK வழியாக செல்லும் CPEC வழித்தடம்
சீனாவின் CPEC வழித்தடத்தை PoK வழியாக கொண்டு செல்வதை இந்தியா கடுமையாக எதிர்க்கிறது மற்றும் அது சட்டவிரோதமானது என்று கருதுகிறது. இது மட்டுமின்றி, இந்த CPEC பெயரில் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் தனது செல்வாக்கை நிலைநாட்ட சீனா இப்போது முயற்சிக்கிறது. சீனாவின் இந்த சவாலை சமாளிக்க தற்போது இந்தியா தனது ராஜதந்திர முயற்சிகளை தீவிரப்படுத்தியதற்கு இதுவே காரணம். பிடனுடனான சந்திப்பில், CPEC மற்றும் BRI என்னும் சீனாவின் புதிய பட்டுச்சாலை ஆகிய சீனாவின் திட்டங்களை முறியடிப்பதற்கான பயனுள்ள வழிகளைப் பற்றி பிரதமர் மோடி பேசுவார் என்று அறிக்கை கூறுகிறது.
G7 நாடுகளின் B3W திட்டம்
பிரதமர் மோடி ஜூன் 21 முதல் ஜூன் 24 வரை அமெரிக்காவில் இருக்கிறார். உலகின் 7 பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட ஜி7 நாடுகள் பிஆர்ஐ என்னும் புதிய பட்டுட்ச் சாலை முஅய்ற்சியை முறியடிக்க என்ன செய்யப் போகிறது என்பது குறித்து பிரதமர் மோடி இப்போது பிடனிடம் பேச்சு வார்த்தை நடத்தக் கூடும். மேலும், உலகில் உள்ள G7 நாடுகளின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டத்தை அமெரிக்க அதிபர் பிடன் வழிநடத்துகிறார். அத்தகைய சூழ்நிலையில், இது குறித்து பிரதமர் மோடிக்கு அவர் சரியான பதிலை அளிக்க முடியும். ஒரு வருடத்திற்கு முன்பு, G7 நாடுகள் வலுவான கட்டமைப்பை ஏற்படுத்த ஒப்புக்கொண்டன.
மேலும் படிக்க | மனிதர்களின் இடத்தை நிரப்பும் செயற்கை நுண்ணறிவு! விமானத்தை இயக்க AI தொழில்நுட்பம்
பில்ட் பேக் பெட்டர் வேர்ல்ட் திட்டம்
G7 நாடுகளின் உள்கட்டமைப்பு திட்டத்தின் பெயர் B3W என்று அழைக்கப்படுகிறது. அதன் முழுப் பெயர் பில்ட் பேக் பெட்டர் வேர்ல்ட் ஆகும். இது சீனாவின் BRI திட்டத்தை தடுக்கும் வகையிலானது என்று நம்பப்படுகிறது. சீனா இப்போது தனது CPEC-ஐ ஆப்கானிஸ்தானுக்கு விரிவுபடுத்தப் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், BRI ஐ துண்டிக்க அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை சர்வதேச சமூகத்திடமிருந்து இந்தியா இப்போது அறிய விரும்புகிறது. விரைவில் அல்லது பின்னர் CPEC விரிவாக்கம் மத்திய ஆசியாவுடன் இணைக்கப்படும் மற்றும் BRI திட்டத்தை விரைவுபடுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது, சீனா மத்திய ஆசிய நாடுகளுடன் இணைந்து, அங்கு தலைமைப் பாத்திரத்தைப் பெற விரும்புகிறது.
மேலும் படிக்க | AI இறந்தவர்களை மீண்டும் ’சிந்திக்க’ உயிர்ப்பிக்கும் செயற்கை நுண்ணறிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ