புதுடெல்லி: சீனாவின் belt and road திட்டத்தை (China–Pakistan Economic Corridor (CPEC)) செயல்படுத்துவதற்கு அந்நாட்டின் முன் இருந்த ஒரே தேர்வு பாகிஸ்தான் தான்.
வறுமையில் தள்ளாடும் பாகிஸ்தானின் பொருளாதார சிக்கல்களுக்கு இறுதி தீர்வாக CPEC விற்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தின்தான் அனைத்து பலன்களையும் தனக்கே வேண்டும் என்று பேராசைப்பட்டது.
2018ஆம் ஆண்டுவாக்கில், 60,000 சீன குடிமக்கள் பாகிஸ்தானில் வசித்து வந்தனர். அவர்கள் வேலைக்காக அங்கே இருந்தார்கள். பாகிஸ்தானியர்களால் நிரப்பப்பட வேண்டிய காலியிடங்கள் மறைமுகமாக சீன குடிமக்களுக்குச் சென்றன.
இதன் தாக்கம் பலூச் போன்ற சமூகங்களை சேர்ந்தவர்களையே பாதித்தன. பாகிஸ்தானின் செழிப்புக்காகவே சிவப்பு கம்பளத் திட்டம் மேற்கொள்ளப்ப்டுவதாக அந்நாட்டு மக்கள் 2015 ஆம் ஆண்டில் நினைத்தனர்.
Xi Jinpingக்கு, பாகிஸ்தானின் உயரிய விருதான ’நிஷான்-இ-பாகிஸ்தான்’ வழங்கப்பட்டது. இந்த விருது, சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரம் (China-Pakistan economic corridor) திட்டம் தொடர்பாக இரு தரப்பினரும் அறிவித்த பிறகே இந்த விருது அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முழு திட்டமும் குவாடரைச் (Gwadar) சுற்றி வருகிறது. CPEC உருவான பிறகு இந்த நகரம் வளர்ச்சியடைந்துள்ளது.
குவாடர் நகரத்திற்கு பெருமளவிலான மக்கள் வரத் தொடங்கினர். இப்பகுதியின் ஒரே ஐந்து நட்சத்திர ஹோட்டலான pearl continental சூடுபிடிக்கத் தொடங்கியது.
சீனாவிலிருந்து பெரிய அளவிலான முதலீடு வந்தது என்னவோ உண்மைதான். ஆனால், அது குவாடரின் உள்ளூர்வாசிகளுக்கு மிகவும் குறைவானதாக தோன்றியது.
சீன முதலீடுகளால் அவர்களுக்கு பெரிய அளவிலான நன்மைகள் எதுவும் கிடைக்கவில்லை, அவர்களது நம்பிக்கைகள் தகர்ந்தன. அந்தப் பகுதியின் சுற்றுவட்டாரப் பகுதிகளை டிராகன் விழுங்கிவிட்டது.
குவாடரின் பெரும்பகுதி இன்னும் பின்தங்கிய குடிசைப் பகுதியாகவே இருக்கிறது, மக்கள் குறைந்தபட்ச ஊதியத்தை சம்பாதிக்கவே திண்டாடுகின்றனர். இதுதான் இங்கு வசிக்கும் பலூச் சமூகத்தின் நிலையாக இருக்கிறது. சீன முதலீடுகள் தங்களை சிறுபான்மையினராக மாற்றும் என்ற அச்சம் அவர்களை ஆக்ரமித்துவிட்டது.
இதனால் பலூச் இனத்தைச் சேர்ந்த சிலர் ஆயுதங்களை எடுத்துள்ளனர். பலூசிஸ்தானில் செயல்படுத்தப்படும் சிபிஇசி திட்டங்களை குறிவைப்பதாக அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
2019 ஆம் ஆண்டில், 14 பயணிகள் பேருந்தில் இருந்து கட்டாயமாக கீழே இறக்கப்பட்டு கொல்லப்பட்டனர். பலியானவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தான் கடற்படை மற்றும் கடலோர காவல்படையைச் சேர்ந்தவர்கள்.
அதே ஆண்டில், pearl continental ஹோட்டல் தாக்கப்பட்டது. குவாடரில் சீனாவின் முதலீடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
Read Also | இந்தியா மீது அணுகுண்டை வீசுவதாக அச்சுறுத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்...
பெய்ஜிங் தனது குடிமக்கள் மற்றும் சொத்துக்களுக்கு பாதுகாப்பு தேவை என்று பாகிஸ்தான் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கிறது. தற்போது சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தின் மையப்பகுதி இப்போது ஒரு ராணுவ மண்டலமாக மாறியுள்ளது.
குவாடரில் 17,000 க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் சீனர்களைப் பாதுகாப்பதற்காக தங்கள் குடிமக்களுடன் போராடுகிறார்கள். சோதனைச் சாவடிகளில் குவாடரைச் சுற்றியுள்ள உள்ளூர்வாசிகள் துன்புறுத்தப்படுவது இயல்பான நடைமுறையாகிவிட்டதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் முழுவதிலுமே சீனர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகின்றனர். பாகிஸ்தானின் பஞ்சாபில் பாகிஸ்தான் போலீஸ்காரர்களுக்கு எதிராக சீன குடிமக்கள் மோதலில் ஈடுபட்ட வீடியோ ஒன்று 2018 இல் வைரலானது. மோதலில் ஈடுபடுபவர்கள் CPEC இன் ஒரு பகுதியை உருவாக்கும் பொறியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு வீடியோவில் ஒரு சீன குடிமகன் ஒரு போலீஸ் வேனின் பேனட்டில் நிற்கிறார். மேலும் சிலர் காரின் கதவைத் திறக்க முயற்சிப்பதைக் காண முடிந்தது. பாகிஸ்தானிய உயரதிகாரிகளின் அரசியல் தவறுகளுக்கு அந்நாட்டு மக்கள் தொடர்ந்து பலியாகின்றனர். தற்போது பாகிஸ்தான் போரிடுவது தனது சொந்த குடிமக்களுடன் என்ற அவலநிலையை இது உணர்த்துகிறது.