AI சாட்ஜிபிடி தொடர்பான சர்வதேச விதிகளை உருவாக்க முயற்சிக்கும் ஜப்பான் உச்சிமாநாடு

ChatGPT In G7 Summit: சாட்ஜிபிடி, செயற்கை தொழில்நுட்பம் சர்வதேச விதிகள் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்! ஜி 7 நாடுகளின் மாநாட்டில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 20, 2023, 02:55 PM IST
  • சாட்ஜிபிடி, செயற்கை தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச விதிகள் உருவாகுமா?
  • ஜி 7 நாடுகளின் மாநாடு அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெறுகிறது
  • நவீன தொழில்நுட்பங்கள் குறித்து ஜி 7 நாட்டுத் தலைவர் ஆலோசிப்பார்கள்
AI சாட்ஜிபிடி தொடர்பான சர்வதேச விதிகளை உருவாக்க முயற்சிக்கும் ஜப்பான் உச்சிமாநாடு title=

செயற்கை நுண்ணறிவு பற்றி G7 நாடுகள் விவாதிக்கும் என்று தெரிகிறது. இந்த மாத இறுதியில் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரின் கூட்டத்தில் ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அமைப்புகளின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்த உதவும் சர்வதேச விதிகளை உருவாக்க முயற்சிக்கும். சாட்ஜிபிடி (ChatGPT) எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வரவு உலகில் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.

அடுத்த மாதம் ஹிரோஷிமாவில் நடைபெறும் G7 கூட்டத்தில், வளர்ச்சி பெற்ற பொருளாதார நாடுகளின் குழுவின் தலைவர்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் AI ChatGPT பற்றி விவாதிப்பார்கள். இந்த மாநாட்டை நடத்தும் ஜப்பானின் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இது தொடர்பாக கியோடோ செய்தி நிறுவனம் இன்று (2023, ஏப்ரல் 20 புதன்கிழமை) கூறியது.
 
இது தொடர்பான வரைவு அறிக்கை அனைத்து G7 உறுப்பினர் நாடுகளுக்கும் அனுப்பப்பட்டது. இதுபோன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகளின் துரித வளர்ச்சி, சமூகத்தில் அவற்றின் சாத்தியமான தாக்கத்தைப் பற்றிய கவலையை எழுப்பியுள்ளது.

பிராந்திய செய்தித்தாள்களின் நிர்வாகிகளுடனான சந்திப்பில் பேசிய ஜப்பான்  பிரதமர் ஃபுமியோ கிஷிடா, "சாட்ஜிபிடி, செயற்கை தொழில்நுட்பம் சர்வதேச விதிகள் உருவாக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார். ஜி 7 நாடுகளின் தலைவர்களின் கூட்டறிக்கையில் இது குறித்து குறிப்பிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | சருமத்தின் கீழ் நெளிந்த புழுக்களை கண்டு அதிர்ந்த பெண்! பச்சை ரத்த உணவினால் வந்த பாதிப்பு!

கிஷிடாவின் கருத்து, இந்த மாநாட்டின் பிற நிரல்களுடன், ChatGPT போன்ற மேம்பட்ட AI அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கான பரவலான அழைப்புகளுக்குப் பிறகு வருகிறது.

ஒரு முன்மாதிரியாக நவம்பர் 2022 இல் தொடங்கப்பட்ட சாட்ஜிபிடி, (ChatGPT (Chat Generative Pre-trained Transformer)) மனித மூளையைப் போலவே செயல்படும் இயந்திரக் கற்றல் மாதிரியால் இயக்கப்படுகிறது. இது மனிதனைப் போன்ற பதில்களை உருவகப்படுத்த அனுமதிக்கும் பெருமளவிலான தரவுகளுடன் முன் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

பல நாடுகள் ஏற்கனவே அனைத்து தளங்களிலும் ChatGPT ஐப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளன, திட்டத்தைத் தடைசெய்த ஒரே ஐரோப்பிய நாடு இத்தாலி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம், ஐரோப்பிய ஒன்றிய சட்டமியற்றுபவர்கள் உலகத் தலைவர்களை அத்தகைய அமைப்புகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய ஒரு உச்சிமாநாட்டை நடத்துமாறு வலியுறுத்தினர், அதே நேரத்தில் அமெரிக்க செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷுமர் கடந்த வாரம் தேசிய பாதுகாப்பு மற்றும் கல்விக் கவலைகளை நிவர்த்தி செய்ய செயற்கை நுண்ணறிவு விதிகளை நிறுவுவதற்கான முயற்சியைத் தொடங்கியதாகக் கூறினார். 

கடந்த வாரம், ஜப்பானின் உள்நாட்டு விவகார அமைச்சர் டேக்ககி மாட்சுமோடோ, உலகத் தலைவர்கள் நம்பகமான செயற்கை நுண்ணறிவுக்கான விதிகளைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூறினார். அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், இந்த மாத இறுதியில் G7 நாடுகளின் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்கள் சந்திப்பின் போது இதைப் பற்றி விவாதிக்க இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க | அம்மா திட்டியதால் வந்த கோபம்! சைக்கிளில் 130 KM சென்று பாட்டியிடம் புகார்!!

செயற்கை நுண்ணறிவு மேலாண்மை மற்றும் செயல்பாட்டின் விதிகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு கட்டமைப்பை நிறுவுவது குறித்தும், சர்வதேச தொழில்நுட்பத் தரங்களைத் தொகுக்க முயற்சிக்கும் வணிகங்களுக்கு உதவுவது குறித்தும் அவர் பேசினார்.

"பங்கேற்கும் நாடுகள் நமது கூட்டுப் பார்வையை நனவாக்க உறுதியான நடவடிக்கைகளைப் பற்றி விவாதிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று மாட்சுமோட்டோ வலியுறுத்தினார்.

டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்கள் கூட்டம் ஏப்ரல் 29-30 தேதிகளில், ஜப்பான் நாட்டின் குன்மா மாகாணத்தின் தகாசாகியில் நடைபெற உள்ளது.

வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகளுக்கு ஆதரவாக பாதுகாப்பான நெட்வொர்க் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், கடலுக்கடியில் உள்ள கேபிள்களின் இணைப்பை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் மற்றும் சில நாடுகளில் இணைய அணுகலைத் தடுப்பது அல்லது கட்டுப்படுத்துவது போன்றவற்றுக்கும் G7 ஒரு செயல் திட்டத்தை உருவாக்கும்.

மேலும் படிக்க | விளையாட்டு வினையானது... மாத்திரைகளால் பறி போன 13 வயது சிறுவனின் உயிர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News