வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்ல காலதாமதம் ஏற்படுவதை தடுக்க ராணுவ ஹெலிகாப்டர்களை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் 21 நாட்களில் வர வேண்டிய பணம் 6 நாட்களில் கிடைத்துவிடும்.
சமூகவலைதளங்களில் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்துக்கு வருவதாக கூறி ரூ.2,000 நோட்டுகளின் படங்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் ஆர்பிஐ வங்கி ரூ.2,000 நோட்டை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும், ரூ.2,000 நோட்டுகள் கர்நாடகாவில் உள்ள மைசூரு ஆர்பி.ஐ அச்சகத்தில் அச்சிட்டுவிட்டதாகவும், விரைவில் மக்களின் புழக்கத்துக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இங்கு காட்டப்பட்டுள்ள கரன்சியில் காந்தியின் படம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த ஆர்பிஐ இன்னும் எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்து வரும் எச்.ஆர்.கான் பதவி காலம் வரும் ஜூலை மாதம் 3-ம் தேதியுடன் நிறைவடைதையொட்டி ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குனராக இருந்த என்.எஸ்.விஸ்வநாதன் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமனம் செய்து அமைச்சவரை நியமனக் குழு அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னராக உள்ள ரகுராம் ராஜனுக்கு 2-வது முறையாக பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று இணையதளம் மூலமாக 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 60 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.