இந்துக்களின் புனித மாதம் எனப்படும் சாவன் மாதத்தின் முதல் திங்கட்கிழமையான இன்று வடமாநிலங்களில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
பத்ரிநாத் கோயில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டதில் உள்ள மலைவாழிடமான பத்ரிநாத்தில் உள்ள ஒரு கோவில். இது பத்ரிநாராயணன் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு திருமால் கோவில். இந்தியாவில் உள்ள முக்கியமான இந்துக்கோவில்களுள் இதுவும் ஒன்று.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் பனிலிங்க தரிசனம் செய்ய புனித யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக 27,000 ராணுவ வீரர்கள் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.
அமர்நாத் புனித யாத்திரை ஜூன் 29-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இங்கு செல்ல இதுவரை 1.8 லட்சம் பக்தர்கள் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அமர்நாத் யாத்திரிகர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை செயலாளர் ராஜிவ் மெஹ்ரிஷி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீசைலம் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புனித நகரம். ஸ்ரீசைலம் அமைந்துள்ள மல்லிகார்ஜுன கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்று.
இந்த கோவில் ஐதராபாத் இருந்து சுமார் 215 கிமீ தெற்கில் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளது. இது தெலுங்கானா, நல்லமலா மலையில் அமைந்துள்ளது.
பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான ஸ்ரீமல்லிகார்ஜுன சுவாமியும், பதினெட்டு சக்தி பீடங்களில் குடிகொண்டுள்ள சக்திகளில் ஒன்றான ஸ்ரீபிரம்மராம்பா தேவியும் கோயில் கொண்ட தலம் ஸ்ரீசைலம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.