கர்நாடக சட்டமன்றத்தின் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் டிசம்பர் 5-ஆம் நாள் நடைப்பெறும் என கர்நாடகாவின் தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பாக சிவசேனாவுடன் தொடர்ந்து மோதல் நீடித்து வரும் நிலையில், மாநிலத்தில் அரசாங்கத்தை உருவாக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி பாரதிய ஜனதாவை அழைக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரூ .73 லட்சம் மதிப்புள்ள கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உட்பட, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்புக்கு ஆந்திர அரசு சுமார் 16 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
50-50 சூத்திரத்தில் காவி கட்சி ஒப்புக் கொண்டால்தான் மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பது குறித்து தாங்கள் முடிவு செய்வோம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ள நிலையில், தனது கட்சித் தலைவர்களுடன் அவசர கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார் தாக்கரே.
ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மக்களுக்கு சேவை செய்ய கட்சிக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கியமைக்கு மக்களுக்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி இளைஞர் அணி தலைவரும் உத்தவ் தாக்கரேவின் மூத்த மகனுமான ஆதித்யா தாக்கரே வோர்லி தொகுதியில் வெற்றி பெற்றுதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்த முடிந்த இரு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுக-விற்கு சாதகமாய் வெளியாகி வரும் நிலையில்., ‘இடைத்தேர்தலில் அதர்மத்தை தோற்கடித்து தர்மம் வென்றுள்ளது’ என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைதேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, வரும் 15.10.2019 மற்றும் 16.10.2019 அன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சர்பில் 11 பேரும், பாஜக சார்பில் 6 பேரும் விருப்ப மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்ட அதிமுகவுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.