தமிழக சுகாதாரத் துறையில் லேப் டெக்னீஷியன் மற்றும் பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களுக்கு முதன்முறையாக 2 திருநங்கைகளை நியமித்து அவர்களுக்கு எடப்பாடி அரசு பெருமை சேர்த்துள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவாளா்களான 19 சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள "தி வைண்ட் ஃபளவர்" ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரும்பாண்மை நிரூபிக்க சசிகலாவுக்கு ஆதராவாக இருப்பதாக கூறியிருந்த சட்டமன்ற உறுப்பினா்களை கூவத்தூர் விடுதியில் தங்க வைத்திருந்தார்.
இப்போது மீண்டும் அதே நிலை திரும்பியுள்ள நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் தமிழக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பாண்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரதமர் மோடியிடம் முக்கிய கோரிக்கை மனுவை கொடுத்தார்.
அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டதாவது:-
* தமிழ்நாட்டின் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையும் மற்றும் பயிர் காப்பீட்டுத் தொகையும் முழுமையாக வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
ஏற்கனவே கடந்த வாரம் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து தமிழக மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை பத்திரத்தை பிரதமரிடம் அளித்தார். இந்நிலையில், தற்போது பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவது தமிழக அரசியலில் அடுத்த என்ன மாற்றம் நிகழும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
திருமங்கலம் - நேரு பூங்கா இடையேயான சுரங்க மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது. மெட்ரோ ரயில் சேவையை மத்திய மந்திரி வெங்கய்ய நாயுடும் முதல்-அமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
சென்னை மாநகரின் போக்குவரத்தை குறைக்கும் மெட்ரோ ரயில் சேவை பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 45 கிமீ தூரம் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ பாதைகள் அமைக்கப்படுகின்றன.
திருமங்கலம் - நேரு பூங்கா இடையே சுரங்க மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடக்க விழாவில் மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு பேசியதாவது:- அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார்.
கட்சிக்கு அப்பாற்பட்டு நான் மிகவும் மதிக்கும் ஆற்றல் மிக்க தலைவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவை இந்த தருணத்தில் நினைவுகூர்கிறேன். சுரங்க ரெயில் பாதையில் அனைத்து பாதுக்காப்பு வசதிகளும் உள்ளன. ஜெயலலிதாவின் கோரிக்கையின் பேரில் மெட்ரோ திட்டம் விரிவு படுத்தப்பட்டது.
கைவினைஞர்கள் பற்றியும் அவர்கள் திறமை தொடர்பான தகவல்களையும் சேகரிக்க தனி வலைதளம் தமிழக முதல்வர் அறிவிப்பு.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டது:-
''தமிழகத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்கள் பற்றியும் அவர்கள் திறமை தொடர்பான தகவல்களையும் சேகரித்து தனி வலைதளம் உருவாக்க புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ் (Tamil Nadu Innovations Initiatives) 2015-16ல் ரூ.1 கோடி நிதியை தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகத்துக்கு அளித்தது.
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் இயற்கை மரணத்துக்காக வழங்கப்படும் உதவித் தொகை ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கும், சிறு/குறு விவசாயிகளுக்கும், வாழ்க்கை முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு, “தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்”என்ற சமூகபாதுகாப்புத் திட்டம் ஜெயலலிதாவால் 15.8.2005 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
வெளிமாநிலம் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை தொடர்பாக திமுக உறுப்பினர் ராஜேந்திரன் இன்று சட்டப்பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் தொடர்பான தீர்மானத்துக்கு விளக்கம் அளித்து சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
டெல்லி ஜே.என்.யூ., வில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் கடந்த 12-ம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
நீட் தேர்வு விலக்கு பரிசீலிக்கப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டுதுறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மத்திய மனித வள மேம்பாட்டுதுறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்து பேசினார்.
அவர் கூறியதாவது:
ஜெயலலிதா ஒரு ஊழல் குற்றவாளி, அவரது படத்தை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துவது அவமானம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தன் பெரும்பான்மையை நிரூபித்த பொழுது சட்டசபையில் ஏற்பட்ட பிரச்னை குறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி
எதிர்க்கட்சி இல்லாமல் ஓட்டெடுப்பு
122 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு- அரசு தப்பியது
கவர்னர் வித்யாசாகர் மும்பை பயணம் ரத்து
சட்டசபை 3 மணி வரை ஒத்திவைப்பு
சட்டசபை மீண்டும் ஒத்திவைப்பு
திமுக எம்.எல்.ஏக்களை குண்டுகட்டாக வெளியேற்ற காவலர்கள் முயற்சி
சபாநாயகர் மைக் மீண்டும் உடைப்பு
ரகசிய ஓட்டெடுப்பு வேண்டும்: எம்.எல்.ஏ.,க்கள் கோஷம்
சட்டசபை வளாகத்திற்கு ஆம்புலன்ஸ் வருகை
சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்
சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றதைக் கண்டித்து மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி, நாளை வரை முதல்வராக இருப்பாரா என்பதே கேள்விக்குறி என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கோவையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்து கூறினார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக-வில் பிளவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்ட சசிகலாவின் ஆதரவாளர்கள் ஒரு அணியாகவும், முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.
தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, இன்று பெங்களூரு செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. திடீர் என இந்த பயணம் ரத்து செய்தார்.
தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளதை அடுத்து ஓ. பன்னீர்செல்வம் தங்கியிருந்த வீட்டை காலி செய்யும் படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் ஓ. பன்னீர்செல்வம் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். நிதி அமைச்சராக இருந்த போது ஓ. பன்னீர்செல்வத்துக்கு இந்த வீடு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதல் அமைச்சராக நேற்று பதவியேற்றத்தை அடுத்து
ஓ. பன்னீர்செல்வம் தங்கியிருக்கும் வீட்டை காலி செய்ய சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை இன்று பொறுப்பேற்றனர். முதல்வர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் கவர்னர். பதவி பிரமாணம் முடிந்தவுடன் நேராக பழனிச்சாமி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் முன்னால் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க கவர்னர் வித்யாசாகர் இன்று அழைத்த பிறகு, அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் செங்கோட்டையன் பள்ளி கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் பதவி அப்படியே நீடிக்கின்றனர்.
சசிகலா விருப்பத்தின்படி எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் அரியணையில் அமர்ந்துள்ளார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு காலக்கெடு 15 நாட்கள் விதிக்கப்பட்டுள்ளது. மெஜாரிட்டியை எடப்பாடி பழனிச்சாமி நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவை கலைக்கப்படும். தனது பெரும்பான்மையை எடப்பாடி பழனிச்சாமி நிரூபிப்பாரா? என்று இனிவரும் நாட்களில் தான் தெரியும்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க கவர்னர் வித்யாசாகர் இன்று அழைத்த பிறகு, அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.