காஷ்மீரின் எல்லைக் கோட்டை ஒட்டிய பகுதிகயில் அமைந்துள்ள நவ்சேரா உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் நவ்சேரா பகுதியில் பொது மக்கள் 2 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர்.
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்சேரா பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படைகள், இந்திய பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு இந்திய படைகளும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திப்பூரா மாவட்டத்தில் இந்திய ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. இருதரப்பினருக்கும் இடையேயான துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி வருவதால் அப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை நீடித்து வருகிறது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர் ஒருவர் பலியானார் மேலும் 3 வீரர்கள் காயமடைந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.