சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ (Vivo) விரைவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. எனினும், இந்த போனின் பெயர் முதல் அம்சங்கள் வரை நிறுவனம் இன்னும் எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சில டிப்ஸ்டர்கள் மற்றும் கசிவுகள் மூலம், இந்த ஃபோனைப் பற்றி சில விஷயங்கள் தெரியவந்துள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
விவோவின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படக்கூடும்
Vivo-வின் புதிய ஸ்மார்ட்போனான Vivo V2140A ஸ்மார்ட்போன் சீன ஸ்மார்ட்போன் சான்றிதழ் இணையதளங்களான TENAA மற்றும் 3C ஆகியவற்றில் காணப்பட்டது. அதன் தகவலும் Nashville Chatter இல் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் படங்கள் மற்றும் சில அம்சங்கள் பற்றிய தகவல்கள் TENAA இல் காணப்பட்டன. இந்த விவோ ஸ்மார்ட்போன் எந்த வகையான அம்சங்களுடன் வெளியிடப்படலாம் என்பதை பார்க்கலாம்.
இந்த அத்தியாவசிய அம்சம் இதில் இருக்காது
செய்திகள் மற்றும் இந்த சான்றிதழ் தளங்களின் படி, இந்த ஸ்மார்ட்போன் 4ஜி ஸ்மார்ட்போனாக இருக்கப்போகிறது. அதாவது பயனர்கள் இந்த போனில் 5ஜி சேவைகளை பெற முடியாது. இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் 5ஜி சேவைகளுடன் வரும் நிலையில், விவோவின் சமீபத்திய ஸ்மார்ட்போன் 4ஜி சேவைகளை ஆதரிக்கும் வகையில் வருவது, பயனர்களுக்கு சற்று அதிர்ச்சியான செய்தியாக இருக்கும்.
ALSO READ | Samsung பெரிய திட்டம்; மீண்டும் வரவிருக்கும் Note சீரிஸ் ஸ்மார்ட்போன்
இந்த மொபைலில் உள்ள சிறப்பம்சம் என்ன
அறிக்கைகள் மற்றும் வதந்திகளின்படி, இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் சிப்செட்டில் வேலை செய்யக்கூடும். இதில் வாடிக்கையாளர்கள் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு திறனைப் பெறலாம். 6.51-இன்ச் HD + AMOLED டிஸ்ப்ளே மூலம், நீங்கள் 720 x 1,600 பிக்சல்கள் ரெசல்யூஷனைப் பெறலாம். இந்த விவோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Vivo V2140A பேட்டரி மற்றும் கேமரா
இந்த Vivo ஸ்மார்ட்போனில் (Smartphone), பயனர்கள் 4,910mAh பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் ஆதரவைப் பெற முடியும் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமராவைப் பற்றி பேசுகையில், நிறுவனம் இரட்டை பின்புற கேமரா அமைப்பை வழங்கக்கூடும். இதில் முதன்மை கேமரா 13MP ஆகவும், இரண்டாம் நிலை கேமரா 2MP ஆகவும் இருக்கலாம். இதன் முன்பக்க கேமரா 8MP கேமராவாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனைப் பற்றி தற்போது எந்த தகவலும் நிறுவனத்திடமிருந்து வெளியிடப்படவில்லை. அதிகாரப்பூர்வமாக இந்த ஸ்மார்ட்போனின் பெயர் கூட வெளிவரவில்லை. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் சீனாவில் அறிமுகம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்கு Oppo மாஸ் 5G Smartphone கிடைக்கும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR