உங்கள் மொபைல் டேட்டா அதிகமாக செலவாகிறதா? உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் செல்வதன் மூலம் ஆப்ஸின் ஆட்டோ அப்டேட்டை நிறுத்தலாம். அதன் முழுமையான செயல்முறை கீழே விளக்கப்பட்டுள்ளது.
மொபைல் டேட்டா செயலிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அலுவலக வேலை முதல் படிப்பு வரை எல்லாவற்றுக்கும் மொபைல் டேட்டா தேவை. தினசரி டேட்டாவுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களைப் பயன்படுத்துவதற்கு இதுவே காரணம்.
இதற்குப் பிறகும், அவர்களின் தினசரி டேட்டா வரம்பு விரைவில் தீர்ந்துவிடுகிறது. எனவே, டேட்டாவை எப்படி சேமிப்பது என்பதுதான் இன்று பலரின் தேவையாக இருக்கிறது.
மக்கள் ஸ்மார்ட்போன்களில் பல மொபைல் செயலிகளைப் பயன்படுத்துகின்றனர். அவற்றையும் அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள இயல்புநிலை அமைப்பு மூலமாக ஆப்ஸ் தானாகவே பதிவிறக்கம் செய்யத் தொடங்கும்.
மேலும் படிக்க | போலி பான் கார்டை கண்டறிவது மிகவும் சுலபம்! எளிய வழிமுறைகள்
இது மக்களின் மொபைல் டேட்டாவையும் பயன்படுத்துகிறது. உங்கள் மொபைல் டேட்டாவையும் சேமிக்க விரும்பினால், இந்த அமைப்பை மாற்றலாம். இதனால், மொபைல் டேட்டாவை ஸ்மார்ட்போனின் செயலி தானாகவே புதுப்பிக்காது.
Google Play Store இல் தானியங்கு புதுப்பிப்பை எவ்வாறு முடக்குவது?
இதற்கு முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் பிளே ஸ்டோரை திறக்கவும்.
அதன் பிறகு சுயவிவர ஐகானைக் கிளிக் செய்யவும். திரையின் மேல் வலது பக்கத்தில் இதைப் பார்ப்பீர்கள்.
இதைச் செய்த பிறகு, பல தெரிவுகள் உங்கள் முன் வரும். அங்கிருந்து Settings என்பதைக் கிளிக் செய்யவும்.
இப்போது Network Preferences என்பதைக் கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க | நெட்ஃபிளிக்ஸ் சந்தாவை எளிதாக ரத்து செய்யும் சுலப வழிமுறைகள்
இங்கே நீங்கள் ஆட்டோ-அப்டேட் ஆப்ஸ் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது நீங்கள் மேலும் 3 விருப்பங்களைப் பெறுவீர்கள்.
அவற்றில், டோன்ட் ஆட்டோ அப்டேட் ஆப்ஸ் அல்லது ஓவர் வைஃபை ஒன்லி என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஆப்ஸை தானாகப் புதுப்பிக்க வேண்டாம் என்பதைத் தேர்ந்தெடுத்தால், ஆப்ஸ் தானாகவே புதுப்பிக்கப்படாது. பின்னர், வைஃபை வழியாக மட்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பது, வைஃபையுடன் இணைக்கப்படும்போது மட்டுமே செயலிகளை புதுப்பிக்கும்.
இதைத் தேர்ந்தெடுத்து முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
தானாகவே செயலியை புதுப்பிப்பதற்கு மட்டும் இந்த முறையைப் பின்பற்றவும்
தானாக புதுப்பித்தலில் இருந்து ஏதேனும் ஒரு செயலியை அகற்ற விரும்பினால், Google Play Store க்குச் செல்லவும்.
அந்த பயன்பாட்டைத் தேடுங்கள். பின்னர் 3 டாட் மெனுவை கிளிக் செய்யவும்.
பின்னர், ஆட்டோ புதுப்பிப்பை இயக்கு என்ற பெட்டியைக் கிளிக் செய்யவும். இதன் மூலம் உங்கள் மொபைல் டேட்டாவை சேமிக்க முடியும்.
மேலும் படிக்க | Best E Bikes: இவைதான் நாட்டின் மிகச்சிறந்த மின்சார பைக்குகள்: விலை, பிற விவரங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR