Oppo 5G: 33 ஆயிரம் ரூபாய் ஸ்மார்ட்போனுக்கு ரூ.27 ஆயிரம் தள்ளுபடி

Flipkart-ல் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடியாக Oppo Reno 10 5G ஸ்மார்ட்போனுக்கு 27 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 20, 2023, 04:10 PM IST
  • Oppo 5G ஸ்மார்ட்போனுக்கு பெரும் தள்ளுபடி
  • 27 ஆயிரம் ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ்
  • வெறும் ரூ.5500 செலுத்தினால் மட்டும் போதும்
Oppo 5G: 33 ஆயிரம் ரூபாய் ஸ்மார்ட்போனுக்கு ரூ.27 ஆயிரம் தள்ளுபடி title=

நீங்கள் நீண்ட காலமாக பெரும் தள்ளுபடியில் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்திருந்தால், இப்போது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. ஏனெனில் Oppo Reno 10 5G ஸ்மார்ட் போனில் Flipkart சிறந்த தள்ளுபடியை வழங்குகிறது. இந்த சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். எனவே நீங்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், நீங்கள் சற்று முந்திக் கொள்ள வேண்டும்.

Oppo Reno 10 5G தள்ளுபடி

தள்ளுபடி சலுகையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், Oppo Reno 10 5G ஸ்மார்ட்போனை Flipkart-லிருந்து மலிவான விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு ஏற்கனவே 15% தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆனால் கூடுதலாக ஒரு சலுகை உள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் வாடிக்கையாளர்கள் நிறைய சேமிக்கலாம். 

மேலும் படிக்க | ஜியோவின் இந்த இரு பிளான்களில் இனி நெட்பிளிக்ஸ் இலவசம்!

எக்ஸ்சேஞ்ச் போனஸ்

Flipkart-ல் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஏற்கனவே 15% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு வாடிக்கையாளர்கள் ரூ.32999-க்கு வாங்க முடியும். இந்த தள்ளுபடி சலுகை உங்களுக்கு விலை உயர்ந்ததாக இருந்து, பிடிக்கவில்லை என்றால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் நீங்கள் ஒரு பம்பர் எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உண்மையில் இந்த ஸ்மார்ட் போனில் 27499 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. இது முழுமையாக செயல்படுத்தப்பட்டால் வாடிக்கையாளர்கள் ரூ. 5500 மட்டுமே செலுத்தினால் போதும். 

Oppo Reno 10 5G விவரக்குறிப்புகள்

Oppo Reno 10 5G ஆனது 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 240Hz தொடு மாதிரி வீதத்தை ஆதரிக்கும் 6.7-இன்ச் முழு-HD+ OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஆக்டா-கோர் 6nm MediaTek Dimensity 7050 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, 8GB RAM மூலம் ஆதரிக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 OS உடன் வருகிறது. Oppo Reno 10 5G ஆனது 64-மெகாபிக்சல் முதன்மை கேமரா, 32-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

மேலும் படிக்க | வாட்ஸ்அப் அப்டேட்: உங்கள் ஸ்கிரீனை மற்றவர்களுக்கு ஷேர் செய்யலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News