Mahindra Cars, Automobile News: தமிழ்நாட்டில் வடிவமைத்து உருவாக்கப்பட்ட மகேந்திரா நிறுவனத்தின் மின்சார கார்களான XEV 9 மற்றும் BE 6 மாடல்களை வாடிக்கையாளர் சோதனை ஓட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முழு அளவில் சார்ஜ் செய்யப்பட்டால் 500 கி.மீ., தூரம் செல்லும் திறன் கொண்ட இந்த இரண்டு வகை மின்சார கார்களும் தானியங்கி முறையில் ஓட்டுநர் இல்லாமலயே பார்க்கிங் செய்து கொள்வது உள்ளிட்ட நவீன வசதிகள் உடன் வருகிறது. இந்த காரை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் பார்த்து இந்த கார் குறித்து முழுவதுமாக கேட்டறிந்தார்.
மகேந்திரா கார்கள்: நாளை முதல் சோதனை ஓட்டம்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மகேந்திரா நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டு பிரிவு தலைவர் வேலுசாமி, "நாளை முதல் இந்த இரண்டு மின்சார கார்களின் சோதனை ஓட்டம் தொடங்கும். ஏற்கனவே இந்த கார்களை அறிமுகம் செய்துவிட்டோம். இன்று முதல்வர் இவற்றை பார்க்க வேண்டும் என்று விருப்பப்பட்டதால் இங்கு எடுத்து வரப்பட்டன.
இரண்டு கார்களுமே முழுவதும் மின்சார கார்களாக உள்ளன. கார்களின் பேட்டரி 20 நிமிடத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும். முழு அளவில் சார்ஜ் ஆனவுடன் 500 கி.மீ., தூரம் வரை இதில் செல்லலாம். குறைத்த நேரத்தில் சார்ஜ் ஆவது, முழு சார்ஜில் அதிக தூரம் செல்வது இரண்டும்தான் இந்த கார்களின் சிறப்பம்சம் ஆகும்.
மேலும் படிக்க | மைலேஜ் மகாராஜாக்கள்... உங்கள் பணத்தை மிச்சம் பண்ணும் டாப் 5 பைக்குகள்
மகேந்திரா கார்கள்: தானியங்கி பார்க்கிங்
இந்த கார்களில் Virtual Auto Park (VAP) எனும் தானியங்கியாக பார்கிங் செய்யும் வசதி உள்ளது. காரை விட்டு இறங்கி வெளியில் சென்று VAP மோடை அழுத்தினால் கார் தானியங்கி முறையில் முன்னோக்கி, பின்னோக்கி நகர்ந்து அதுவே பார்க்கிங் ஆகிவிடும். ஒருவேளை பார்க்கிங் ஆவதை தடுக்கும் வகையில் ஏதேனும் பொருட்கள் இருந்தால் அதுகுறித்து சத்தம் எழுப்பி எச்சரிக்கை செய்துவிடும். இந்த கார்களில் 12 ultaras sonic சென்சார்கள், 6 கேமராக்கள் , 5 ரேடார்கள் உள்ளன.
வாகனத்தை ஓட்டிச் செல்லும் ஓட்டுநரின் கருவிழியை கவனிக்கும் வகையில் கேமராக்கள் உள்ளன. ஓட்டுநர் நேராக சாலையை பார்க்காமல் வேறு எங்கும் பார்த்தால் எச்சரிக்கை செய்வதுடன் ஸ்டியரிங் தானாகவே அசைந்தும், திரும்பியும் சரியான பாதையில் கார் செல்வதை உறுதி செய்யும்.
மகேந்திரா கார்கள்: விலை என்ன?
பாதுகாப்பில் இரண்டுமே 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார்கள் ஆகும். Navigation முறையில் எந்த சாலையில் செல்ல வேண்டுமோ அந்த சாலைக்கு arrow காண்பிக்கும் வகையில் அமைந்துள்ளோம். போக்குவரத்து நெரிசலில் 30, 20, 50 என வேகத்தை அதுவே பரிந்துரைக்கும். காருக்குள் 3 திரைகள், 16 speaker அமைக்கப்பட்டுள்ளன. இந்த விலையில் உள்ள Audi, Benz கார்களில் கூட இந்தளவு ஆடியோ சிஸ்டம் கிடையாது.
இந்த கார்களை Pack 3 கார்களாக சந்தையில் அறிமுகப்படுத்துகிறோம். அதன்டி XEV 9 e கார்கள் ரூ. 39.5 லட்சமும் , BE 6 கார்கள் ரூ.26.9 லட்சமும் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கார்கள் நெடுஞ்சாலையில் போகும்போது ஒரு சாலையில் இருந்து மறு சாலைக்கு மாற indicator போட்டாலே போதும், அந்த சாலையில் வேறு வாகனங்கள் இல்லை என்பதை உறுதி செய்து தானாகவே கார்கள் அடுத்த சாலைக்கு சென்றுவிடும். சாலையின் குறுக்கே மாடு நின்றால் அதை கண்டறிந்து தானாகவே கார் நின்றுவிடும்.
மகேந்திரா கார்கள்: பேட்டரிகள் எப்படி?
நெடுஞ்சாலைகளில் செல்லும்போது ஓட்டுனர் உள்ளே அமர்ந்திருப்பது அவசியம். ஆனாலும் ஓட்டுநர் விருப்பப்பட்டால் கார் தானாகவே சாலைகளுக்கு ஏற்ப வளைந்து செல்லும் வகையில் Mode மாற்றிக் கொள்ள முடியும். வெள்ள நீரால் இந்த வகை கார்கள் பாதிக்கப்படாது. Battery test செய்தபோது 48 மணி நேரம் தண்ணீருக்குள்ளேயே இந்த கார்களின் பேட்டரிகள் வைக்கப்பட்டு இருந்தன. 12 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே போட்டாலும் பேட்டரி உடையாது.
வீடுகளில் AC power charge முறையில் 2 கார்களையும் சார்ஜ் செய்ய முடியும் . நெடுஞ்சாலைகளிலும் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முழு அளவில் சார்ஜ் செய்தால் நகரங்களுக்குள் 400 கி.மீ., தூரமும், நெடுஞ்சாலைகளில் 500 கி.மீ., தூரமும் இந்த கார்கள் பயணிக்கும்" என்று கூறினார்.
மேலும் படிக்க | நவம்பரில் அதிகம் விற்பனையான கார்கள் என்னென்ன தெரியுமா...? டாப் 5 இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ