Sani Peyarchi Palangal: மார்ச் மாதம் 29 ஆம் தேதி நடக்கவுள்ள சனி பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை பெறவுள்ள ராசிகள் எவை? யாருக்கு ஏழரை சனியிலிருந்து நிவாரணம்? சனி பெயர்ச்சி ராசிபலனை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
Sani Peyarchi Palangal: அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் சுமார் 2 1/2 ஆண்டுகளுக்கு இருக்கிறார். ராசிகளில் அதிக நாட்களுக்கு இருப்பதால், இவரது தாக்கமும் அதிகமாக உள்ளது. தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் உள்ள சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி இரவு 10.01 மணிக்கு மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். இந்த சனி பெயர்ச்சி இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இதனால் அதிக நற்பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அனைத்து கிரகங்களிலும் அவர் மிக முக்கியமான கிரகமாக உள்ளார்.
மார்ச் மாதம் 29 ஆம் தேதி சனி பகவான் குரு பகவானின் ராசியான மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். மீனத்தில் சனி பெயர்ச்சி 2025 ஆம் ஆண்டின் மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகின்றது.
சனி பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் கிடைக்கும். சில ராசிகளுக்கு ஏழரை சனியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு இந்த நேரம் பொற்காலமாய் இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மிதுனம்: மிதுன ராசியினருக்கு சனிப்பெயர்ச்சி அனுகூலமான பலன்களை அளிக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபம் அடைவார்கள். மாணவர்களுக்கு தங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி ஒரு வகையில் சிறப்பானதாக இருக்கும். பணியாளர்களுக்கும் வணிகர்களுக்கும் நல்ல காலமாக இது இருக்கும். வேலையில் முன்னேற்றம் காணலாம். உங்கள் சம்பளம் அதிகரிக்கலாம். தொழில் வல்லுநர்கள் சிறப்பு நன்மைகளைப் பெறுவார்கள். கணவன் மனைவி இடையேயான உறவு மேம்படும். நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு மீன ராசியில் சனி பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்: விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு அனுமனின் சிறப்பு ஆசீர்வாதங்கள் கிடைக்கும். அனைத்து வகையான பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் ஒரு புதிய பரிமாணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி பல வித இன்னல்களிலிருந்து நிவாரணம் அளிக்கும். இவர்களுக்கு ஏழரை சனியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கிடைக்கும். இந்த நேரத்தில் வணிக வளர்ச்சிக்கு வலுவான வாய்ப்பு உள்ளது.
சனி பகவானின் அருள் பெற, “ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ” என்ற சனி மூல மந்திரத்தை ஜபிப்பதும் நல்ல பலன்களை அளிக்கும். மேலும், 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்தோத்திரத்தையும் தினமும் கூறலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.