Reliance Jio Prima 4G: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோன் ப்ரைமா 4ஜி (JioPhone Prima 4G) என்ற புதிய 4ஜி மொபைல் போனை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மொபைலில் வாட்ஸ்அப், யூ-ட்யூப் மற்றும் பிற செயலிக்கான ஆதரவுடன் வருகிறது.
ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையை வழங்குவது மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது இந்த 4ஜி மொபைல் சாமானியர்களும் வாங்கும் வகையில் இருப்பதால் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் ஃபயர்பாக்ஸ் ஓபன் சோர்ஸ் திட்ட அடிப்படையிலான மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டமான KaiOS உடன் இயங்குகிறது என்பதால் இதில் ஆண்ட்ராய்டில் உள்ள செயலிகளும் கிடைக்கின்றன.
ஜியோ நிறுவனத்தின் புதிய JioPhone Prima 4G மொபைல், ஜியோ நிறுவனத்தின் மற்ற மொபைல்களில் இருந்து சற்று வித்தியாசமானது. இது JioCinema மற்றும் JioPay போன்ற அந்நிறுவனத்தின் செயலிகளை மட்டுமே ஆதரிக்கும் தனியுரிமை மென்பொருளைப் பயன்படுத்துகிறது. டெல்லியில் நடைபெற்ற இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) 2023 ஜியோ புதிய போனை வெளியிட்டது.
மேலும் படிக்க | EPF பாஸ்புக்கை எவ்வாறு சரிபார்ப்பது? ஆன்லைன் வழிமுறை இதுதான்
முக்கிய அம்சங்கள்
JioPhone Prima 4G ஆனது 2.4-இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதன் மேலே ஒரு இயர்பீஸ் மற்றும் மேல் வலது விளிம்பில் லேன்யார்டு லூப் ஆகியவற்றுடன் வருகிறது. இது 1800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு நாளுக்கு மேல் நீடிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த 4ஜி மொபைல் ARM Cortex-A53 பிராஸஸரை பயன்படுத்துகிறது. மொபைலின் மென்மையான செயல்திறனுக்காக 512MB RAM இணைக்கப்பட்டுள்ளது. மொபைலில் 128GB வரையிலான மெமரி கார்டு ஆதரவு உள்ளது. இது தொடுத்திறை அல்லாமல் கீ-பேட் போனாகும்.
JioPhone Prima 4G ஆனது KaiOS ஆப்ரேட்டிங் சிஸ்டம் உன் இயங்குகிறது. இதில் முன்னதாக சொன்னதுபோல், வாட்ஸ்அப், யூ-ட்யூப், கூகுள் மேப்ஸ் மற்றும் ஃபேஸ்புக் போன்ற 1200க்கும் மேற்பட்ட செயலிகளை இதில் பயன்படுத்தலாம். . JioCinema, JioTV, JioSaavn மற்றும் JioNews போன்ற ஜியோவின் செயலிகளை மொபைலில் இருக்கும். இருப்பினும், இந்த மொபைலில் UPI பேமெண்ட்டுகளுக்கு இதுவரை எந்த ஆதரவும் இல்லை.
இது ஜியோபாரத் மொபைல்களில் கிடைக்கிறது. இந்த மொபைல் 23 இந்திய மொழிகளில் பயன்படுத்தக் கிடைக்கிறது. JioPhone Prima 4G மொபைலில் FM ரேடியோ மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் கிடைக்கிறது. ஜியோபோன் ப்ரைமா 4ஜி ரிலையன்ஸ் ஜியோவால் வழங்கப்படுவதால், இது ஜியோ சிம் கார்டுடன் மட்டுமே இயங்குகிறது. இந்த மொபைலில் நீங்கள் மற்ற மொபைல் ஆபரேட்டர்களைப் பயன்படுத்த முடியாது.
விலை என்ன?
இந்தியாவில் ஜியோபோன் ப்ரைமா 4ஜி விலை ரூ.2,599 ஆகும். இது மஞ்சள் மற்றும் நீல வண்ணங்களில் வருகிறது. JioMart தளத்தில் இருந்து வாங்க இயலும். நீங்கள் மொபைலில் தள்ளுபடிகள், கேஷ்பேக்குகள் மற்றும் கூப்பன்களைப் பெறலாம்.
மேலும் படிக்க | Jio's Value Plans: ரிலையன்ஸ் ஜியோ-வின் மூன்று முக்கிய வேல்யூ ரீசார்ஜ் திட்டம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ