91 ரூபாயில் என்னவெல்லாம் கிடைக்கும்? ஜியோ ரிலையன்ஸ் வழங்கும் சூப்பர் திட்டம்!

91 Rupees Reliance Recharge : முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், மொபைல் பயனர்களுக்கு 91 ரூபாயில் நல்ல சேவையை வழங்குகிறது. இந்தத் திட்டத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 23, 2024, 05:56 PM IST
  • முகேஷ் அம்பானியின் ஜியோ ப்ரீபெய்ட் பிளான்
  • மொபைல் பயனர்களுக்கு குறைந்த பணத்தில் நல்ல சேவை
  • 91 ரூபாய் திட்டம்
91 ரூபாயில் என்னவெல்லாம் கிடைக்கும்? ஜியோ ரிலையன்ஸ் வழங்கும் சூப்பர் திட்டம்! title=

Reliance Jio: டெலிகாம் சந்தையில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தும் முகேஷ் அம்பானி, தற்போது வெறும் 91 ரூபாயில் பல நன்மைகளை அளிக்கும் திட்டத்தை வழங்குகிறார். பிரபல தொழிலதிபரும் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நாட்டில் மிகவும் பிரபலமானது. ஜியோ பயனாளர்களின் எண்ணிக்கை கோடிகளில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்னதாக, ஜியோ தனது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது.

ஜியோவைப் போலவே மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் கட்டணத் திட்டங்களின் விகிதங்களை உயர்த்திய நிலையில் விலை உயர்வுக்குப் பிறகும், முகேஷ் அம்பானி ஜியோ பயனர்களுக்கு மலிவான ஒரு திட்டத்தை வழங்குகிறார். குறைந்த பணத்தில் நல்ல சேவையை வழங்கும் திட்டத்தின் பலன்களை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். 

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.91 திட்டம்
ஜியோ அதன் பயனர்களுக்கு பல்வேறு விலை வரம்புகளில் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. ஜியோவின் போர்ட்ஃபோலியோவை கவனமாகப் பார்த்தால், வெறும் 91 ரூபாய்க்கு வரும் ஒரு திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் திட்டம் குறைந்த விலையில் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

மேலும் படிக்க | மேம்படுத்தப்பட்ட JioFinance செயலி! கிடுகிடுவென உயரும் பயனர்களின் எண்ணிக்கை! அப்படியென்ன சிறப்பு?

28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் 91 ரூபாய் திட்டம், பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்பு வசதியை வழங்குகிறது. இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிலும்  எவ்வளவு வேண்டுமானாலும் அழைப்புகளை செய்யலாம்.

ஜியோ 91 ரூபாய் திட்டம் நன்மைகள்
ஜியோவின் இந்தத் திட்டத்தின் கீழ், மொத்தம் 3 ஜிபியைப் கிடைக்கும், இதில் தினசரி 100 எம்பி டேட்டாவும், கூடுதலாக 200 எம்பி டேட்டாவும் வழங்கப்படுகிறது. கூடுதலாக, இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் மொத்தம் 50 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் உண்டு. ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் இலவச சந்தாவும் கிடைக்கும்.

இந்த திட்டம் ஜியோ போன் பயனர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ போனைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்ற திட்டம் இது. ஜியோவின் இணையதளம், My Jio ஆப் அல்லது பிற UPI ஆப்ஸ் மூலம் இந்தத் திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.

மேலும் படிக்க | மொபைல் போனை பாதிக்கும் ஆபத்தான வைரஸ்... இந்த செயலிகள் இருந்தால் எச்சரிக்கை தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News