Used Cars: ரூ. 19,000-ல் கூட கார் வாங்கலாம், மாருதி சுசுகி அளிக்கும் அசத்தல் ஆஃபர்

Used Cars: ஒருவர் கார் ஓட்டக் கற்றுக் கொண்டாலோ அல்லது கற்றுக்கொள்ள விரும்பினாலோ, பழைய காரை வாங்கி அதில் கார் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்று பலர் அவருக்கு அறிவுரை கூறுவதுண்டு. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒருவருக்கு 19 ஆயிரம் ரூபாய்க்கு கார் கிடைத்தால், அது எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 14, 2022, 05:32 PM IST
  • அசத்தல் விலையில் செகண்ட் ஹேண்ட் கார்கள்.
  • மாருதி சுசுகி அளிக்கும் அசத்தல் வாய்ப்பு.
  • நம்ப முடியாத விலையில் கார்களை வாங்கலாம்.
Used Cars: ரூ. 19,000-ல் கூட கார் வாங்கலாம், மாருதி சுசுகி அளிக்கும் அசத்தல் ஆஃபர் title=

செகண்ட் ஹேண்ட் கார்கள்: ஒருவர் கார் ஓட்டக் கற்றுக் கொண்டாலோ அல்லது கற்றுக்கொள்ள விரும்பினாலோ, பழைய காரை வாங்கி அதில் கார் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்று பலர் அவருக்கு அறிவுரை கூறுவதுண்டு. இப்படி செய்வதால், கார் ஓட்டக் கற்றுக் கொள்ளும்போது கார் மோதினாலோ அல்லது அதற்கு சேதம் ஏற்பட்டாலோ, பின்னர் அதை பற்றி அதிகம் கவலைப்பட தேவை இருக்காது. 

அதே நேரத்தில், இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஒரு புதிய காரில் நடந்தால், கார் உரிமையாளர் அதைப் பற்றி அதிகம் வருத்தப்படுவார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒருவருக்கு 19 ஆயிரம் ரூபாய்க்கு கார் கிடைத்தால், அது எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். 

அத்தகைய மலிவான கார் கிடைத்தால், ஒருவர் தேய்மானம் அல்லது பிற சேதங்கள் பற்றி அதிகம் கவலைப்படாமல் எளிதாக வாகனம் ஓட்ட கற்றுக்கொள்ள முடியும். இந்த பதிவில், அத்தகைய சில மிக மலிவான கார்கள் பற்றி காணலாம். இவற்றின் விலை வெறும் 19 ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இந்த கார்கள் பற்றிய தகவல் 13 ஜூன் 2022 அன்று மாருதி சுஸுகி ட்ரூ வேல்யூ இணையதளத்தில் காணப்பட்டது. 

மேலும் படிக்க | 528 கி.மீ மைலேஜ் கொடுக்கும் கியா காரின் சிறப்பம்சங்கள் 

மாருதி 800 எஸ்டிடி எம்பிஎஃப்ஐக்கு 19 ஆயிரம் ரூபாய்க்கான டிமேண்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் 2008 மாடல் மற்றும் இதுவரை 97731 கிமீ பயணித்துள்ளது. இருப்பினும், கார் ஃபர்ஸ்ட் ஓனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெட்ரோல் எஞ்சின் கார் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் வேலை செய்கிறது. இது இந்தூரில் விற்பனைக்கு உள்ளது.

மாருதி ஆல்டோ 800 எல்எக்ஸ்ஐக்கு 23 ஆயிரம் ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. இணையதளத்தில், இது 2017 மாடல் என்று கூறப்படுகிறது (இது தவறுதலாக எழுதப்பட்டிருக்கலாம்). இந்த கார் இதுவரை 54288 கிமீ பயணித்துள்ளது. இது ஒரு பெட்ரோல் எஞ்சின் கார் ஆகும். இது மேனுவல் டிரான்ஸ்மிஷனில் வேலை செய்கிறது. கார் முதல் உரிமையாளர் மற்றும் ஜாம்நகரில் விற்பனைக்கு உள்ளது.

மாருதி 800 எஸ்டிடிக்கு 35 ஆயிரம் ரூபாய்க்கான கோரிக்கை உள்ளது. இது 2008 மாடல் கார் ஆகும். இதுவரை 126685 கிமீ பயணித்துள்ளது. இது ஒரு பெட்ரோல் எஞ்சின் கார் ஆகும். மேனுவல் டிரான்ஸ்மிஷனில் மட்டுமே இது வேலை செய்கிறது. கார் முதல் உரிமையாளர் மற்றும் மானேசரில் விற்பனைக்கு உள்ளது.

மாருதி 800 எஸ்டிடி எம்பிஎஃப்ஐக்கு (இது முதலில் இருந்ததை விட வித்தியாசமானது), 35 ஆயிரம் ரூபாய் கோரப்படுகிறது. இது 2007 மாடல் கார் ஆகும். இது மொத்தம் 92028 கி.மீ.  பயணித்துள்ளது. இது பெட்ரோல் எஞ்சின் கார் ஆகும். கார் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் வேலை செய்கிறது. இந்த முதல் உரிமையாளர் கார் கோட்டயத்தில் விற்பனைக்கு உள்ளது.

(குறிப்பு- பயன்படுத்திய கார்களை வாங்க நாங்கள் யாரையும் பரிந்துரைக்கவில்லை. இந்தக் கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே.)

மேலும் படிக்க | ரூ. 6 லட்சத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும் அசத்தலான 7 சீட்டர் கார்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News