Tata Motors: 10 எலெக்ட்ரிக் கார்களை வெளியிட டாடா மோட்டர்ஸ் திட்டம்

டாடா மோட்டார்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் எதிர்கால இயக்கம் திட்டங்கள் குறித்த தகவல்களை பங்குதாரர்களுக்கு ஒரு செய்தியில் பகிர்ந்து கொண்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 29, 2021, 06:37 AM IST
Tata Motors: 10 எலெக்ட்ரிக் கார்களை வெளியிட டாடா மோட்டர்ஸ் திட்டம் title=

மின் வாகனங்கள் தொடர்பாக இதுவரை எந்த தகவலையும் வழகங்காத டாடா மோட்டார்ஸ் நிறுவனம், முதன்முறையாக எலெக்ட்ரிக் வாகங்களுக்கான திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி,  அடுத்த நான்கு ஆண்டுகளில் 10 எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் என் சந்திரசேகரன் தெரிவித்து உள்ளார். 

டாடா மோட்டார்ஸ் (TATA Motors) நிறுவனத்தின் 76-வது ஆண்டு அறிக்கையில் இதனை முக்கிய தகவலை என் சந்திரசேகரன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது., இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனச் (Electric Vehicle) சந்தை தற்போது உயர்ந்து வருகிறது. மொத்த வாகன விற்பனையில் 2 சதவீதம் அளவுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்கு உள்ளது. வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும். அதனால் 2025 ஆம் ஆண்டுக்குள் டாடா மோட்டார்ஸ் இன் 10 புதிய எலெட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

ALSO READ | Ola, Yamaha, Suzuki: அட்டகாசமான Electric scooter-களை அறிமுகம் செய்யவுள்ளன, வாங்க தயாரா?

மேலும் இந்த கார்களில் சார்ஜ் ஏற்றும் மையங்களை நாடு முழுவதும் அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். பேட்டரி உற்பத்தியில் டாடாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான நிறுவனங்களையும் நாங்கள் பரிசீலனை செய்து வருகிறோம். இந்தியா மட்டும் இல்லாமல் உலக நாடுகளிலும் பேட்டரி தயாரிப்பில் கவனம் செலுத்த இருக்கிறோம். அதேபோல ஆட்டோமொபைல் சாப்ட்வேர் மற்றும் இன்ஜினீயரிங் பிரிவை அமைக்கவும் திட்டமிட்டுவருகிறோம்.

எங்கள் நிறுவனங்கள் 150 நாடுகளில் உள்ளன. 7.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர், 65 கோடி வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். டாடா மோட்டார்ஸ் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து நெக்ஸன் இ.வி.யின் 4000 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் டைகோர் காம்பாக்ட் செடானையும் விற்பனை செய்கிறது என தெரிவித்திருக்கிறார்.

ALSO READ | Electric Scooter-களை அறிமுகம் செய்யவுள்ளன Hero, Honda: 5 மடங்கு செலவு குறையும்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News