நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார பிரச்சனைகள் அனைத்து துறைகளிலும் எதிரொலித்து வருகிறது. குறிப்பாக பணவீக்கம் மக்களை கவலையடைய செய்திருக்கிறது. இதன் எதிரொலியாக மொபைல் கட்டணங்களை உயர்த்த டெலிகாம் நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இந்த முடிவு மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்க உள்ளது.
விரைவில் ப்ரீப்பெய்ட் கட்டணங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உயர்த்த உள்ளன. அனைத்து நிறுவனங்களும் விலையை உயர்த்த இருக்கும் நிலையில், ஏர்டெல் இதனை வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் உறுதி செய்துள்ளார். விரைவில் அனைத்து ப்ரீப்பெய்டு திட்டங்களின் விலை உயர்த்தப்படும் எனக் கூறிய அவர், அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனத் தெரவித்துள்ளார்.
மேலும் படிக்க | போன் நம்பர் இல்லாமல் ஜிமெயிலை மீட்க ஈஸியான டிப்ஸ்
" விலை ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. இதனால், விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். விரைவில் விலை ஏற்றத்துக்கான அறிவிப்பு வெளியிடுகிறோம். ப்ரீப்பெய்டு திட்டங்களின் விலை முதலில் உயர்த்தப்பட இருக்கிறது. வாடிக்கையாளர் ஒருவருக்கு சராசரியாக 200 ரூபாய் வருமானம் என்ற அளவில் திட்டங்களின் விலை உயர்த்தப்படும்" என கோபால் விட்டல் கூறினார்.
அதேநேரத்தில் சாமானியர்களை பெரிய அளவில் பாதிக்காத வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படும் என கோபால் விட்டல் கூறியுள்ளார். நடைமுறையில் இருக்கும் திட்டங்களுக்கு ஏர்டெல் நிறுவனம் எவ்வளவு விலை உயர்த்தப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏர்டெல் நிறுவனத்தைப் போலவே மற்ற நிறுவனங்களும் விலை உயர்வு குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | போன் வாங்க பிளானா; ரூ.30,000 விலை 5 சிறந்த ஸ்மார்ட்போன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR