1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழகம் பற்றி எரிந்தது. போராட்டத்தை கட்டுப்படுத்த ராணுவம் அழைக்கப்பட்டது.இந்தி திணிப்பை எதிர்த்து 50 நாட்கள் நடந்த இந்த போராட்டத்தில் நூற்றுகணக்காணோர் இறந்தனர்.
இந்த போராட்டம் காரணமாக, 1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி தோற்கடிப்பட்டு, திமுக ஆட்சி பீடத்தில் ஏறியது. கர்மவீரர், நாட்டிற்காக அல்லும் பகலும் சிந்தித்த உன்னத தலைவர் காமராஜர், அந்த தேர்தலில், தோற்றுப் போனார்.
இப்போது கிட்டத்தட்ட 55 ஆண்டுகள் கடந்த நிலையில், தமிழ்நாட்டில், மீண்டும் அதே ஆயுதத்தை கொண்டு ஆட்சி பீடத்தை கைப்பற்றி விடலாம் என்று திமுக நினைக்கிறது.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் திமுக (DMK) கட்சியை சேர்ந்த எம்பியான கனிமொழி, தனக்கு இந்தி தெரியாததால், தான் இந்தியரா என பாதுகாப்பு அதிகாரி கேட்டதாகவும், இந்தி தெரிந்தால் தான் இந்தியரா எனவும் தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த CISF நிர்வாகம், உடனடியாக இது குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவு செய்தது.
அதற்கு நன்றி என பதிலளித்த கனி மொழி அவர்கள் கேட்ட விபரம் ஏதும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | பொய் சொல்லி மாட்டிக் கொண்டாரா கனிமொழி... சூடு பிடிக்கும் அரசியல் களம்...!!!
இந்நிலையில், இந்த மாத தொடக்கத்தில், ”இந்தி தெரியாது போடா” என்ற டீ சர்டுகள் அணிந்து அதன் புகைப்படங்களும் ஹேஷ்டேகுகளும் ட்ரெண்டிங் செய்யப்பட்டன.
ஆனால், அதில் நேர்ந்த சோகம் என்னவென்றால், டீசர்ட் அணிந்திருந்த அனைவரும் இந்தி மொழியை அறிந்தவர்கள் என்பது தான்.
இந்த டீசர்டை அணிந்து புகைப்படத்தை பதிவிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தி சேனலின் பிரபலமான ஷோ ஒன்றில், பெருமையாக இந்தி தெரியும் என கூறும் வீடியோ வைரலானதில், அவர் தனது ட்வீட்டை ட்லீட் செய்து விட்டு ஓடி விட்டார்.
திமுக கட்சியை சேர்ந்தவர்கள் சொந்தமாக நடத்தும் அனைத்து CBSE பள்ளிகளிலும் இந்தி கட்டாயமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், தமிழ் கட்டாயமில்லை என்பது தான்.
காசு படைத்தவர்கள் இந்தி மொழியை கற்றுக் கொண்டு, வாய்ப்புகளை பெருக்கி கொள்ளும் போது, அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அந்த வாய்ப்பை மறுக்கும் வகையில், மும்மொழிக் கொள்கையை எதிர்த்து வருகிறது திமுக கட்சி. மும்மொழிக் கொள்கையில், இந்தி கட்டாயமில்லை. மூன்றாவதாக எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், தமிழ்நாட்டில் இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டால், 100க்கு 98 பேர் இந்தி மொழியைத் தான் தேர்வு செய்வார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
அதோடு, மற்றொரு புறம், கொஞ்சம் பணம் சேர்ந்தால், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்காமல், தனியார் பள்ளிகளில் சேர்ப்பவர்களே அதிகம் உள்ளனர். தமிழ்நாட்டில், அரசு பள்ளிகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள நகர பகுதிகளில், “இங்கு இந்தி கற்றுத் தரப்படும்” என்ற போர்டை எங்கும் காணலாம்.
இந்தி பிரச்சார சபா மூலம், இந்தி மொழியை கற்பதில், தென்னிந்தியாவில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது. 2010 ஆம் ஆண்டில் ஆண்டு ஒன்றுக்கு தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சமாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில், இந்தி எதிர்ப்பு எடுபடுமா என்பது சந்தேகமே.
இந்தி தெரிந்ததால் தான், தயாநிதி மாறனை மத்திய அமைச்சராக்கியதாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அப்படி இருக்கும் போது, வசதி படைத்த வீட்டில் உள்ளவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு, அனைவருக்கும் கிடைப்பது இல்லை.
திமுக, இந்தி எதிர்ப்பில் உறுதியாக இருந்தால், தாங்கள் நடத்தும் சிபிஎஸ்ஈ (CBSE) பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்கபட மாட்டாது என்ற நிலையை எடுப்பார்களா என்ற கேள்வியும் கூடவே எழாமல் இல்லை.
தமிழ்நாட்டில் இந்தி தொழிலாளர்கள் தான் அதிகம் உள்ளனர். தமிழ்நாட்டில், கூலி வேலை செய்ய ஆட்கள் தயாராகவும் இல்லை, அவர்களை வேலையில் வைத்துக் கொள்ளவும் முதலாளிகளும் தயாராக இல்லை.
குறைந்த சம்பளத்தில் சிறப்பாக வேலை செய்யும் இந்தி தொழிலாளர்களே போதும் என்ற மனநிலையில் தான் முதலாளிகளும் உள்ளனர்.
கொரோனா காரணமாக சொந்த ஊர் திரும்பி சென்றவர்களை தங்கள் செலவிலேயே கூட்டிக் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மற்றொரு விஷயத்தை கூர்ந்து கவனித்தால், இந்தி எதிர்ப்பை எப்போதுமே கடைபிடித்து வந்த திமுகவை விட, இந்திய எதிர்ப்பை பற்றி பேசாத, அதிமுக தான், அதிக ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியில் இருந்து வருகிறது. இத்தனைக்கும் திமுகவில் இருந்து பிரிந்த கட்சி தான் அதிமுக என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்
இந்த நிலையில், தேர்தலுக்காக திமுக கையில் எடுத்துள்ள இந்தி எதிர்ப்பு என்னும் ஆயுதம், 1967ல் கை கொடுத்ததை போல், கை கொடுக்குமா என்பது சந்தேகம் தான்.. அது சொதப்புவதற்காக வாய்ப்புகளே அதிகம்.
ALSO READ | TTV Dinakaran-னின் தில்லி பயணம்: தமிழக அரசியலில் பெரும் சலசலப்பு!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR