அண்ணா பிறந்தநாளை மாநில உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும்! தொல்.திருமாவளவன்

அண்ணா பிறந்தநாளை "மாநில உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 10, 2021, 01:13 PM IST
அண்ணா பிறந்தநாளை மாநில உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும்! தொல்.திருமாவளவன் title=

அண்ணா பிறந்தநாளை "மாநில உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து பெரம்பலூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

பெரியாரின் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி. செப்.17-ம் தேதி தமிழகமெங்கும் பெரியார் சிலைகள் அருகே விசிக சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெறும்.

ALSO READ : உச்சிப்பிள்ளையார் கோயில் பிள்ளையாருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டது

மாநில உரிமைகளுக்காக இந்திய அளவில் தொடர்ந்து உரிமைக் குரல் எழுப்பி, மாநிலங்களுக்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், கூட்டாட்சி தத்துவத்தையும் வலியுறுத்திய பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை மாநில சுயாட்சி தினம் அல்லது மாநில உரிமைகள் தினமாக கொண்டாட தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

சாதிவாரி அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனும் பலதரப்பட்ட மக்களின் கோரிக்கையை விசிக ஆதரிக்கிறது. அப்படி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம். இது பல்வேறு பிரச்சினைகளுக்கு விடையளிக்கும். தமிழக முதல்வர் இந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்பட வேண்டும் எனும் விசிகவின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

ALSO READ : யூடியூப்பருடன் காதல்; கருத்து வேறுபாடு காரணமாக மாணவி தற்கொலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News