தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள ஏத்தகோவில் மலைப்பகுதியில் தற்போது பழங்குடியின மக்கள் சுமார் 20 பேர் வசித்து வருகின்றனர். மலைகளில் உள்ள தேன், கிழங்கு உள்ளிட்டவைகளை எடுத்து விற்று அதன் மூலம் பிழைப்பு நடத்தும் இவர்கள், அங்குள்ள பாறை இடுக்குகளில் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த எம்.ஜி.ஆர் ஆட்சியில் 1985 - 86ஆம் ஆண்டு வாக்கில் 13 தொகுப்பு வீடுகள் அரசு சார்பில் கட்டித் தரப்பட்டது. அப்போது சுமார் 100க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வந்துள்ளனர்.
ஆனால் காலப்போக்கில் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட தொகுப்பு வீடுகளை, அப்பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தினர் சிலர் ஆக்கிரமித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அங்கு வசித்து வந்த பழங்குடியின மக்கள் வசித்து வந்த வீடுகளை விட்டு வேறு இடத்திற்கு குடி பெயர்ந்துள்ளனர். இதனால் அவர்கள் தவிக்கும் அவலம் உருவானது. இவற்றில் தற்போது 3 வீடுகள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதுவும் சிதிலமடைந்த காணப்படுவதால் அச்சத்தில் மீண்டும் வனப்பகுதிக்கே குடிபெயர்ந்து விட்டனர்.
ALSO READ | ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்; காவல்துறை தீவிர விசாரணை!
இது குறித்து அப்பகுதி பழங்குடியினர் கூறுகையில், குடியிருக்கு வீடுகள் இல்லாததால் மலைப்பகுதியில் ஓலை குடிசை அமைத்து வசித்து வருகின்றோம். இரவில் கரடி உள்ளிட்ட வனவிலங்குகளால் பெரும் இன்னல்களை சந்தித்து உயிர்ப் பயத்திலே உறைந்துள்ளோம். இதை விட கொடுமையானது ரேசன், ஆதார் வாக்காளர் உள்ளிட்ட அடிப்படை குடியுரிமை இருந்தும் பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் வழங்க அரசு அதிகாரிகள் மறுக்கின்றனர். இதனால் பள்ளியில் படிக்கும் தங்களின் குழந்தைகளின் கல்வி பாதித்து பாதியில் படிப்பை கைவிடும் அவலத்தில் உள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வரும் தங்களுக்கு உதவ அரசு முன்வர வேண்டும் என்று பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR