TNSDC-ன் மேம்படுத்தப்பட்ட portal-ஐ துவக்கி வைத்தார் EPS!!

TNSDC தொழில்கள், தொழில்துறை சங்கங்கள், பயிற்சி வழங்குநர்கள், துறை திறன் கவுன்சில்கள், மதிப்பீட்டு முகவர்கள், பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 20, 2020, 03:17 PM IST
  • 2 கோடி செலவில் உருவாக்கப்பட்ட TNSDC-க்கான மேம்படுத்தப்பட்ட போர்ட்டலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.
  • TNSDC-யின் https://www.tnskill.tn.gov.in/ என்ற வலைத்தளம் 2 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டது.
  • பதிவுசெய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு இ-கற்றல் வசதிகளை வழங்குவதற்காக கலிபோர்னியாவை சேர்ந்த கோசெராவுடன் MoU.
TNSDC-ன் மேம்படுத்தப்பட்ட portal-ஐ துவக்கி வைத்தார் EPS!! title=

சென்னை: 2 கோடி செலவில் உருவாக்கப்பட்ட TNSDC-க்கான மேம்படுத்தப்பட்ட போர்ட்டலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி (K Palanisamy) தொடக்கி வைத்தார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) என்பது மாநிலத்தில் திறன் மேம்பாடு தொடர்பான நடவடிக்கைகளுக்கான நோடல் ஏஜென்சி ஆகும். மேலும் இது தொழில்கள், தொழில்துறை சங்கங்கள், பயிற்சி வழங்குநர்கள், துறை திறன் கவுன்சில்கள், மதிப்பீட்டு முகவர்கள், பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசு அமைப்புகள் (State and Central Government Bodies) உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

TNSDC இளைஞர்களை அவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கும், தொழில்துறையின் எதிர்பார்ப்புகளுடன் பொருந்துவதற்கும் அதிகாரம் அளிப்பதன் மூலம் மாநிலத்தை திறன் மையமாக மாற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. 2013 முதல், இது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் ஒரு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

அதன்படி, TNSDC-யின் https://www.tnskill.tn.gov.in/ என்ற வலைத்தளம் ரூ .2 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டது. இது தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது.

ALSO READ: இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம், பின்வாங்க மாட்டோம்: EPS

புதிய மேம்பாடு மூலம், பயனர்களின் மெய்நிகர் பதிவு, பயிற்சி நிறுவனங்களின் அங்கீகாரங்கள், மின் சான்றிதழ்கள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வருகை பதிவைப் பராமரித்தல் ஆகிய பல பணிகள் இனி சாத்தியமாகும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

கூடுதலாக, TNSDC 'தி ராம்கோ சிமென்ட்ஸ் லிமிடெட்' உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. கட்டுமான மற்றும் உள்கட்டமைப்புப் பிரிவில், உலகத் தரம் வாய்ந்த திறன் மேம்பாட்டு மையத்தை நிறுவுதல் மற்றும் தமிழ்நாட்டில் 50,000 வேலையற்ற இளைஞர்களுக்கு இலவச ஆன்லைன் கல்வி (Online Studies) மற்றும் பயிற்சி அளித்தல் ஆகியவை இதன் இலக்காக உள்ளன.

மேலும், வலைத்தளம் ஒரு ஒருங்கிணைந்த ஒற்றை திறன் பதிவேட்டைக் கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அதில் பிற துறைகளின் விவரங்களும் அடங்கும். இதன் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பதிவுசெய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு இ-கற்றல் வசதிகளை (e-learning Facility) வழங்குவதற்காக கலிபோர்னியாவை (California) தளமாகக் கொண்ட கோசெராவுடன் (Coursera) மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிறுவனம், பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கூகிள், ஐபிஎம் மற்றும் அரசு நிறுவனங்களுடன் இணைந்து பொறியியல், இயந்திர கற்றல், கணிதம், வணிகம், கணினி அறிவியல், டிஜிட்டல் மார்க்கெட்டிங், மருத்துவம், உயிரியல், சமூக அறிவியல் மற்றும் ஆன்லைனில் பல சான்றிதழ் மற்றும் பட்டப்படிப்புகளை வழங்குகிறது. சான்றிதழ் படிப்புகளுடன், கோர்செரா உலகெங்கிலும் உள்ள 80 நாடுகளில் திறன்களை வளர்க்கும் நோக்கில் பயிற்சி வகுப்புகளை வழங்குகிறது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டில் வேலையற்ற இளைஞர்களை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும். இதன் மூலம், அவர்களுக்கு தேவையான இ-பயிற்சி அளிக்கப்பட்டு, தொழில்துறை காலியிடங்களின்படி அவர்கள் வேலைவாய்ப்புக்கு தகுதியுடையவர்களாக மேம்படுத்தப்படுவார்கள். 

ALSO READ: மத்திய அரசின் விவசாய மசோதாக்களை BJP-ன் கூட்டணிக் கட்சிகளே எதிர்க்கின்றன: MKS

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News