இரவில் கிஸ்மிஸ் பழத்தை நீரில் ஊறவைத்து... காலையில் அதை குடித்தால் வரும் 5 நன்மைகள்

Health Benefits Of Soaked Raisins Water: இரவு முழுவதும் உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து, காலை எழுந்ததும் அந்த தண்ணீரை அப்படியே  வெறும் வயிற்றில் குடித்தால் கிடைத்தும் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.

பொதுவாக, கிஸ்மிஸ் என்றழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. சமச்சீரான ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்வது உடல்நலனுக்கு முக்கியம் ஆகும். அந்த வகையில், உலர் திராட்சையை ஊறவைத்து, அந்த தண்ணீரை அருந்துவதும் உடல்நலனுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

 

1 /8

உலர் திராட்சையில் நார்ச்சத்து, வைட்டமிண்கள், பொட்டாஸியம், இரும்புச்சத்து, கால்சியம் போன்ற கனிமங்கள் ஆகியவை நிறைந்திருக்கின்றன.   

2 /8

அந்த வகையில், இரவில் உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து, அதனை காலையில் குடித்து வந்தால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.  

3 /8

அசிடிட்டியை குறைக்கும்: உடலில் உள்ள ஆசிடிட்டி அளவு சீராக வைக்க இது உதவும். உலர் திராட்சையின் காரத் தன்மை அமிலத்தன்மையை நடுநிலையாக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் வரும் ஆபத்தை குறைக்கும். காலையில் இதை குடிப்பது நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணம் போன்ற அசிடிட்டி பிரச்னைகள் குறையும். ஆரோக்கியமான செரிமான அமைப்பை இது ஊக்குவிக்கவும்.  

4 /8

உடல் எடை சீராகும்: உலர் திராட்சையை ஊறவைத்த வயிறு நிறைவையும், வளர்ச்சிதை மாற்றத்தையும் தூண்டும். இதில் உள்ள நார்ச்சத்து உங்களது செரிமானத்தை மெதுவாக்கி, உங்களது பசியை அடக்கும். இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், பாலிஃபெனால்ஸ் ஆகியவை கொழுப்பை குறைக்க உதவும். உடல் எடையை குறைக்கவும் இது உதவும்.  

5 /8

கல்லீரலின் நச்சுக்கள் வெளியேறும்: உலர் திராட்சையை ஊறவைத்த தண்ணீரை குடிப்பது உங்களுக்கு இயற்கையாகவே நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. கல்லீரலில் இருக்கும் நச்சுக்கள், தேவையற்ற பொருள்களை வெளியேற்றும். கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.  

6 /8

நோய் எதிர்ப்பு சக்தி பலமாகும்: நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே இது தூண்டும். ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் பாலிஃபெனால்ஸ் ஆகியவை நோய்களுக்கு எதிராக உங்களது உடலை போராட தூண்டும். இதில் உள்ள வைட்டமிண்கள், கனிமங்கள் உடலில் வெள்ளை ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உதவும்.  

7 /8

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது: ஊறவைத்த உலர் திராட்சை தண்ணீரை அருந்துவதால் கொலஸ்ட்ரால் அளவு குறையும், ரத்த அழுத்தமும் குறையும். இதில் உள்ள பொட்டாஸியம் சோடியம் அளவை குறைக்க உதவும். அதேபோல், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்து எழுதப்பட்டவையாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.