Thoothukkudi Lok Sabha Election Result 2024: தூத்துக்குடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Tamil Nadu Lok Sabha Election Result 2024: தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார். அவரின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக அந்த தொகுதியில் இருக்கிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 4, 2024, 09:10 AM IST
  • தூத்துக்குடியில் வெற்றி கொடி நாட்டும் கனிமொழி
  • கனமழையின்போது மக்களுடன் களத்தில் நின்றது ப்ளஸ்
  • செல்வாக்கு மிக்க வேட்பாளர் என்பதால் வெற்றி வாய்ப்பு அதிகம்
Thoothukkudi Lok Sabha Election Result 2024: தூத்துக்குடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? title=

Thoothukkudi Tamil Nadu Lok Sabha Election Result 2024: தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி போட்டியிட்டுள்ளார். இரண்டாவது முறையாக அந்த தொகுதியில் போட்டியிடும் அவருக்கு அந்த தொகுதியில் எதிர்ப்பு அலைகளே இல்லை. கனமழை, வெள்ள பாதிப்பில் தூத்துக்குடி சிக்கியபோது, களத்தில் இரவு பகல் பாராமல் முழுவதுமாக களப்பணியாற்றி கனிமொழிக்கு தொகுதி மக்களிடையே செல்வாக்கு, நன்மதிப்பு பெருகியது. இதனால் அவரின் வெற்றி என்பது அந்த தொகுதியில் நிச்சயிக்கப்பட்டதாக இருந்தாலும், எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதையாவது தெரிந்து கொள்வோம்.

தூத்துக்குடி தொகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகள்

தூத்துக்குடி, 
விளாத்திக்குளம், 
திருச்செந்தூர், 
ஒட்டப்பிடாரம், 
கோவில்பட்டி, 
ஸ்ரீவைகுண்டம்

மேலும் படிக்க | உங்கள் தொகுதி வாக்கு எண்ணிக்கையை அப்டேட்டாக பார்த்து தெரிந்து கொள்வது எப்படி?

தூத்துக்குடி தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கை

மொத்த வாக்காளர்கள் - 14,58,430            
ஆண் வாக்காளர்கள் - 7,13,388             
பெண் வாக்காளர்கள் - 7,44,826             
மூன்றாம் பாலினத்தவர் - 216

தூத்துக்குடி மக்களவை தொகுதி 2019 நிலவரம்

வெற்றி பெற்றவர் - கனிமொழி திமுக - பெற்ற வாக்குகள் - 563143

இரண்டாம் இடம் -தமிழிசை பாஜக - பெற்ற வாக்குகள் - 215934

மூன்றாம் இடம் - புவனேஸ்வரன் அமமுக - பெற்ற வாக்குகள் - 76866

தூத்துக்கு மக்களவை தொகுதி 2024 வேட்பாளர்கள்

திமுக - கனிமொழி
அதிமுக - சிவசாமி வேலுமணி
பாஜக - ஸ்.டி.ஆர். விஜயசீலன் (தமாகா)
நாதக - ரொவினா ரூத் ஜேன்

தூத்துக்குடி வெற்றி வாய்ப்பு யாருக்கு?

கனிமொழியை எதிர்த்து அதிமுக, பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தாமாக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இருப்பினும் கனிமொழிக்கு நிகரான செல்வாக்கு இந்த தொகுதியில் மற்ற எந்த வேட்பாளர்களுக்கும் இல்லை. 2019 ஆம் ஆண்டு மக்களவை தொகுதியில் பாஜக இந்த தொகுதியில் நேரடியாக போட்டியிட்ட நிலையில், இம்முறை அந்த தொகுதியை கூட்டணிக் கட்சியான தாமாகவுக்கு ஒதுக்கியது. அக்கட்சி வேட்பாளரை தேர்வு செய்து அறிவிப்பதிலேயே பெரும் தடுமாற்றம் இருந்தது. கனிமொழிக்கு நிகராக யாரும் பிரச்சாரமும் செய்யவில்லை என்பதால் அவர் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார் என்பது மட்டுமே எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

மேலும் படிக்க | மக்களவை தேர்தல் முடிவுகள் 2024: ECI இணையதளத்தில் காண்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

 

Trending News