அதிமுக தோற்றதால் தனது காலை கிழித்து கொண்ட தொண்டர்!

தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்ததை தொடர்ந்து மணமுடைந்த தொண்டர் காலை கத்தியால் கிழித்து கொண்டுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jun 9, 2024, 03:39 PM IST
  • நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட் இழந்த அதிமுக.
  • பல இடங்களில் படு தோல்வி அடைந்தது.
  • தொண்டர் ஒருவர் காலை அறுத்துக்கொண்டுள்ளார்.
அதிமுக தோற்றதால் தனது காலை கிழித்து கொண்ட தொண்டர்! title=

அதிமுக தோற்றதால் மனமுடைந்து தனது காலில் கிழித்துக்கொண்ட அதிமுக தொண்டர் செல்வகுமாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சசிகலா அவருக்கு ஆறுதல் கூறினார். மேலும் 2026 ஆம் ஆண்டு அதிமுக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்று உறுதி கொடுத்துள்ளார். தூத்துக்குடி திரவியபுரம் பகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர் செல்வகுமார் என்பவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தூத்துக்குடி நெல்லை உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் டெபாசிட் இழந்ததை தொடர்ந்து மணமுடைந்த நிலையில் திமுக தொண்டரிடம் அதிமுக வெற்றி பெறும் இல்லை யென்றால் என் ரத்தத்தை அதிமுகவிற்காக அளிப்பேன் என்ற பந்தயம் எதிரொலியாக தனது குதிங்கால் பகுதியில் கத்தியால் கிழித்து ரத்தத்தை கான்பித்துள்ளார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

மேலும் படிக்க | PF கணக்கிலிருந்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் பணத்தை எடுப்பது எப்படி?

இவ்வாறு அதிமுக தோற்றதால் மனம் உடைந்து தனது காலை கிழித்துக்கொண்ட அதிமுக தொண்டரிடம் சசிகலா நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு ஆறுதல் கூறினார். உங்களுக்கு குடும்பம் உள்ளது, இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. உடம்பை பார்த்துக் கொள்ளவும், அதிமுகவை நான் பார்த்துக் கொள்கிறேன். 2026 ஆம் ஆண்டு நிச்சயமாக அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என உறுதி கூறினார். சசிகலா தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அதிமுக தொண்டர் செல்வகுமார் கட்சி ஒன்றிணைந்து 2026 இல் ஆட்சி அமைக்கும் என சசிகலா கூறியது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

நேற்று சேலம் ஓமலூர் அதிமுக புறநகர் கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதிமுக 2019 நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளுடன் தற்போது ஒரு சதவீதம் வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது. இது அதிமுக கிடைத்த வெற்றியாகும். பாரதிய ஜனதா குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறது, திமுகவும் குறைவான வாக்கு பெற்றிருக்கிறது. அந்தந்த தேர்தலில் சூழ்நிலைக்கு தக்கவாறு வெற்றி தோல்வி அமையும். ஒரு கட்சி தோல்வி அடைந்தால் மீண்டும் தோல்வி அடையும் என்பதில்லை என்றார்.

சசிகலா, ஓபிஎஸ் பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவோம் கூறியிருக்கிறார்களே என்ற கேள்விக்கு, முடிந்து போன கதை. குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கூறுகின்றனர். அவர்களெல்லாம் பிரிந்து சென்றதால், ஒரு சில இடங்களில் கூடுதலாக வாக்குகள் கிடைத்துள்ளது கூறினார். கோவையில் அண்ணாமலை குறைவான வாக்குகள் தான் வாங்கி உள்ளார் .ஒவ்வொரு முறையும் நாடாளுமன்ற தேர்தல் என்றாலும், பாராளுமன்ற தேர்தல் என்றாலும் வாக்கு வித்தியாசம் மாறி மாறி தான் வரும். சூழ்நிலைக்கு தக்கவாறு மக்கள் வாக்களிக்கிறார்கள்.

மேலும் படிக்க | தேர்தல் முடிவுகளின் எதிரொலி: மூன்றே நாளில் இரட்டிப்பான நிலத்தின் மதிப்பு...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News