முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ( Rajiv Gandhi Case) கடந்த 30 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச் சிறையில் நளினி ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் தனது தாய் பத்மாவை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பரோல் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவுக்கு பதில் அளித்த தமிழக அரசு, 30 நாட்கள் பரோல் வழங்குவதாக தெரிவித்தது.
Also Read | ராஜேந்திர பாலாஜிக்கு செக்: விரைவில் கைது செய்வோம்- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
இதனையடுத்து வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, இன்று வெளியே வந்தார். அவரை காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் காட்பாடியை அடுத்த பிரம்ம்புரத்தில் வசிக்கும் தாய் பத்மா வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். வாடகை வீட்டில் தங்கியிருக்கும் நளினியின் தாயார் பத்மா, மகள் நளினியை கண்ணீர்மல்க வரவேற்றார்.
நளினி தங்கியிருக்கும் வீட்டை 2 டி.எஸ்.பிக்கள் தலைமையில் சுழற்சி முறையில் 50 துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் 30 நாட்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அந்த வீட்டில் இருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் பேரிக்கார்டுகளும் வைக்கப்பட்டுள்ளது. பரோலில் இருக்கும் நளினிக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொலைக்காட்சி, பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது. அரசியல் பிரமுகர்களை சந்திக்கக்கூடாது. பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கூடாது. குறிப்பிட்ட அளவை காட்டிலும் வெளியில் செல்லக்கூடாது, வெளியாட்களை சந்திக்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை அவர் கடைபிடிக்க வேண்டும்.
ALSO READ | ALSO READ | ராஜேந்திர பாலாஜிக்கு அடுத்த ’செக்’..! லுக்அவுட் நோட்டீஸ் வழங்க திட்டம்
மேலும், அருகில் உள்ள காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும். நளினிக்கு இது 4-வது பரோல். சகோதரன் திருமணம், தந்தை இறப்பு மற்றும் மகள் திருமணத்துக்கு வெளியே வந்த நளினி, தற்போது 4வது முறையாக தாயின் உடல்நிலையை கவனித்துக் கொள்வதற்காக பரோலில் வந்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR