பொன்முடி விடுதலை ரத்து... அமைச்சரவையில் வரப்போகும் மாற்றம்?

Minister Ponmudi Case: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டில் அமைச்சர் பொன்முடியின் விடுதலையை ரத்து செய்த உயர்நீதிமன்றம் வழக்கின் தண்டனை விபரங்களை டிசம்பர் 21 ஆம் தேதி அறிவிக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 19, 2023, 02:41 PM IST
  • பொன்முடி மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு
  • விடுதலையை ரத்து செய்தது செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
  • டிசம்பர் 21 ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என அறிவிப்பு
பொன்முடி விடுதலை ரத்து... அமைச்சரவையில் வரப்போகும் மாற்றம்? title=

பொன்முடி வழக்கில் தீர்ப்பு

தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி (Minister Ponmudi) வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி விசாலாட்சியும் தண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கின் தண்டனை விவரங்கள் டிசம்பர் 21 ஆம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) தெரிவித்துள்ளது. அன்று அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி நேரிலோ அல்லது காணொளி வாயிலாகவோ ஆஜராகலாம் என நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். 

சொத்து குவிப்பு வழக்கு பின்னணி

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராகவும், கனிமளவத்துறை அமைச்சராகவும் இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் அமைச்சர் பொன்முடி (Minister Ponmudi Case) மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி அவரை விடுதலை செய்தது நீதிமன்றம். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேலும் படிக்க | அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து... சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அறிவிப்பு எப்போது?

சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை

இதில், பொன்முடியின் வருமானம், வருமானவரி மற்றும் சொத்து விவரங்கள் ஆகியவற்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை 39 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை ஆதாரங்களையும் சமர்பித்தது. பொன்முடி தரப்பில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை என்றும், பொன்முடியின் மனைவிக்கு 110 ஏக்கர் நிலம் தனியாக இருப்பதாகவும், இதில் மேற்கொள்ளப்படும் வர்த்தகத்தை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக 64.90 விழுக்காடு சொத்து சேர்த்தது நிரூபணமாகிவிட்டதாக தீர்ப்பளித்தார். 

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கடி

இதனால் திமுக அமைச்சரவையில் பொன்முடி தகுதியிழப்பை எதிர்கொள்ள இருக்கிறார். மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி, நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவுடன் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் அந்த நிமிடத்தில் இருந்து தகுதியிழப்பை எதிர்கொள்வார்கள். அதன்படி டிசம்பர் 21 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தண்டனை விவரங்களை அறிவித்தவுடன் பொன்முடி எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதியிழப்பை எதிர்கொள்ள நேரிடும். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி (Senthil Balaji) சிறையில் இருக்கிறார். அவர் இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்ந்து கொண்டிருகிறார். இந்த சூழலில் மற்றொரு அமைச்சரும் தண்டனையை எதிர்கொண்டிருப்பது நிர்வாக ரீதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | கருவில் இருந்தே துரத்திய பகை..! 19 ஆண்டுகள் கழித்து பழிதீர்த்த மகன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News