சமீபத்திய நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள், மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான நமது கொள்கை நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன என்று தமிழக முதலமைச்சரும், திமுக கட்சியின் தலைவருமான திரு ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள மு.க ஸ்டாலின் அவர்கள், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள், குறிப்பிட்ட மையங்களில் இருந்து மொத்தமாக அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் என்ற போர்வையில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற அளவில் மதிப்பெண்களை அள்ளி வழங்குவது போன்ற குழப்பங்கள் தற்போதைய ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்குகின்றன என்று தெரிவித்துள்ளார்.
Trends emerging from the latest #NEET results have once again vindicated our principled opposition to the exam.
Issues such as question paper leaks, clustering of toppers at specific centres, and award of marks, which are mathematically impossible, under the guise of grace…
— M.K.Stalin (@mkstalin) June 7, 2024
ன்றிய அரசின் அதிகாரக்குவிப்பின் குறைபாடுகளை வெட்டவெளிச்சமாக்கும் இந்த பிரச்சனைகள், தொழிற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகள் மற்றும் பள்ளிக் கல்வி முறை மீண்டும் முதன்மை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன என்று திரு மு.க ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் படிக்க | நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: 8 தமிழக மாணவர்கள் முதலிடம்
நீட் மற்றும் பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிரானவை என்றும், அவை கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை மற்றும் சமூகநீதிக்கு எதிரானவை என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறோம் என்று தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர், சமீபத்திய NEET நுழைவுத்தேர்வு முடிவுகளில் இருந்து வெளிவரும் போக்குகள், இதற்கு எதிரான திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை ரீதியான எதிர்ப்பு சரியானதே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன என்று கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிவதன் விளைவுகளை வெளிச்சம்போட்டு காட்டும், நீட் நுழைவுத்தேர்வு, தகுதியான பகுதிகளில் மருத்துவர்கள் கிடைப்பதை பாதிக்கின்றன என்றும், இந்த நோயை ஒழிக்க கைகோர்ப்போம். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை! என்றும் தமிழ்நாடு முதல்வர் அறைகூவல் விடுத்துள்ளார்.
மேலும் படிக்க | பரட்டை ஆனா ஒரிஜினல்! மறைமுக தாக்குதல் நடத்தும் தமிழக பாஜக முன்னாள் தலைவர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ